வடக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க நடவடிக்கை

13 Oct, 2024 | 05:56 PM
image

மணிக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் இயங்கும் நோக்கில் நவீனமயமாக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையடையாத காரணத்தால் அந்தப் பகுதி ரயில்களின் வேகத்தை மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ். முதலி மற்றும் புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிபர்கள் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் தலைமையில் ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  

இந்த ரயில் பாதையை எதிர்வரும் 22ஆம் திகதி திறக்கவும், முழுமையடையாத பழுதுகளை மீளமைக்கவும் செய்ய ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் ரயிலை இயக்கவும் பொதுமுகாமையாளர் அறிவுறுத்தியுள்ளார். 

இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணிநேரத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணிநேரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

3,000 கோடி ரூபாய் செலவில் மஹவ முதல் அநுராதபுரம் வரையான பகுதியின் நிர்மாணப்பணிகள் இந்திய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டன.  

எனினும் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்த நிறுவனத்திடமிருந்து ரயில் பாதையை ரயில்வே திணைக்களம் உத்தியோகபூர்வமாக கையகப்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில்...

2026-01-24 10:40:30
news-image

கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால்...

2026-01-24 10:20:59
news-image

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி...

2026-01-24 10:20:01
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 09:44:42
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09
news-image

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...

2026-01-24 09:21:06
news-image

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை...

2026-01-24 09:10:46
news-image

இலங்கை கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-01-24 08:39:47
news-image

தனிப்பட்ட தகராறு கொலையில் முடிந்தது!

2026-01-24 08:30:08
news-image

வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!

2026-01-24 08:26:25