தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

13 Oct, 2024 | 01:03 PM
image

(நமது நிருபர்) 

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபாய் தண்டப் பணம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் தாம், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சேவை நிலையத்துக்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை  நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை ;...

2024-11-10 11:12:15
news-image

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும்...

2024-11-10 10:57:33
news-image

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்...

2024-11-10 10:51:16
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும்...

2024-11-10 10:37:37
news-image

தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய...

2024-11-10 09:32:01
news-image

கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை...

2024-11-10 09:20:26
news-image

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார்...

2024-11-10 09:46:49
news-image

இன்றைய வானிலை

2024-11-10 07:07:34
news-image

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-09 18:33:44
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2024-11-09 18:07:08
news-image

மொனராகலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட...

2024-11-09 17:49:55
news-image

கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு...

2024-11-09 17:33:52