தேசிய கட்சிகளின் தேசியப் பட்டியல் வெளியீடு!

13 Oct, 2024 | 01:12 PM
image

(நமது நிருபர்)  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.   

அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பெயர்களும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தினேஷ் குணவர்தன, ஷியாமலா பெரேரா, மொஹமட் பைசர் முஸ்தபா, டிரான் அலஸ், மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜயந்த வீரசிங்க, செந்தில் தொண்டமான், சுரேந்திர ராகவன், ரொனால்ட் சித்ரஞ்சன் பெரேரா, ரவி கருணாநாயக்க, தலதா அத்துகோரள, கனிஷ்க சுரனிமல் ராஜபக்ஷ, மொஹமட் முஸ்தபா அன்வர், நிசங்க நாணயக்கார, சாகல அபேவிக்ரம, சிறிபால அமரசிங்க, வீரகுமார திஸாநாயக்க, ரஷ்தான் ரஹ்மான், நிமல்கா பெர்னாண்டோ, தமயந்தி ஜெயசேகர, நியூட்டன் பீரிஸ், லெஸ்லி தேவேந்திர, மஹிந்த செனரத் பண்டார, ஆதம்பாவ லெப்பை திரு, மொஹமட் முஸம்மில், வெல்லாலகே பந்துல, சிறிமசிறி ஹப்புஆராச்சி, பியுமி செனரத் சமரதுங்க, கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், நாமல் ராஜபக்ஷ, காமினி லொகுகே, சி.பி. ரத்நாயக்க, வண.உத்துராவல தம்மரதன தேரர், திஸ்ஸ விதாரண, ஜயந்த கெட்டகொட, சாகர காரியவசம், திசக்குட்டி ஆராச்சி, வண. தெபுவான பியானந்த தேரோ தெபுவான, முஹம்மது ஃபதில் மர்ஜான் அஸ்மி, ரேணுகா பெரேரா, விமல் கீகங்கே, டபிள்யூ.தயாரத்ன, அனுஷா தமயந்தி, ஜகத் வெள்ளவத்தை, வசந்த ஹந்தபாங்கொட, விராஜ் பெரேரா, அதுல பிரியதர்ஷன டி சில்வா, மஞ்சுள வெல்லலகே, ரவிஹார குலதுங்க, தமித் ஹெட்டிஹேவா, ரஞ்சித் பண்டார, விதுர பெரேரா, பசன் கஸ்தூரி பெர்னாண்டோ, சரத் கீர்த்திரத்ன, சுதத் ரோஹண, மஹிந்த பத்திரன, ரத்ன தர்மப்ரியா தயா பத்திரன, சமந்தா இந்திக ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களாக பிமல் ரத்நாயக்க, பேராசிரியர் வசந்த சுபசிங்க, கலாநிதி அனுர கருணாதிலக்க, பேராசிரியர் உபாலி பனிலகே, எரங்க உதேஷ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனித ருவன் கொடிதுக்கு, புண்ய ஸ்ரீ குமார ஜெயக்கொடி, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, வழக்கறிஞர் லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் குமார் கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா, கீர்த்தி வெலிசரகே, சமிலா குமுது பிரிஸ், அப்துல் ஃபதா முகமது இக்ராம், ரஞ்சன் ஜெயலால் பெரேரா, மொஹமட் முகமது நசீர் இக்ராம், க்ளோமெட் மார்ட்டின் நெல்சன், ரொமேஷ் மோகன் டி மெல், பெனிடா பிரிஷாந்தி ஹெட்டிதந்த்ர, புபுது நுவன் சமரவீர, சரத் லால் பெரேரா, அனுர ஹெட்டிகொட கமகே, ஹேமதிலக கமகே ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் பிரதான வேட்பாளர் ஒருவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

அதனடிப்படையில், ரஞ்சித் மத்தும பண்டார, இம்தியாஸ் பகீர் மார்க்கர், டலஸ் அழகப்பெரும, சாகரன் விஜயேந்திரன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க, ஜி.எல். பீரிஸ், சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, உபுல் ஜயசூரிய, மஹீம் மெண்டிஸ், உபுல் பண்டார திஸாநாயக்க, ரோஹன லக்ஷ்மன் பியதாச, லிஹினி பெர்னாண்டோ, ரவீந்திர சமரவீர, அதுலசிறி சமரகோன், கெனடி குணவர்தன, லலித் பிரசன்ன பெரேரா, விசாகா சூரியபண்டார, மகேஷ் சேனாநாயக்க, ரவி ஜயவர்தன, டி.டி.பி. விஜேகுணவர்தன, எல். மித்ரபாலா, பழனிவேலு பரமேஸ்வரன், பாலகிஷ்ணன் சிவநேசன், ஜி. நகுலேஸ்வரன், சந்திம விஜேகுணவர்தன, எம்.எச்.எம்.ரூமி, எம்.ஐ.எம். முஹம்மது, இந்திக்க பண்டாரநாயக்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.  

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியலில் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்டுள்ளது.  

அதன்படி, ஹேமகுமார நாணயக்கார, கிகனகே வீரசிங்க, ரஞ்சன் குமார் செனவிரத்ன, காமினி வலேபொட, ரொஹான் ஹர்ஷ பெர்னாண்டோ, நாலக பெரேரா, கணபதி பிள்ளை, ரொஷான் மஹேஸ் ஜேம்ஸ் குணதிலக்க, புஞ்சி நிலமே மீகஸ்வத்த, சமீர பிரசங்க சோமரத்ன, டியூடர் வீரசிங்க, நந்தசிறி வீரசிங்க, ஜகத் கொடிதுவக்கு, வருண சந்திரகீர்த்தி ஹெட்டியாராச்சி, ருவன் பண்டார ருக்மன் திலகரத்ன, தனுஜா தம்மிக்க ரத்மலே, ரணுக சம்பத் மாரசிங்க, ஷெஹான் அம்பேபிட்டிய, சூரிய பண்டார திஸாநாயக்க, மொஹமட் ஹசன், திலின பீரிஸ், பூபதி யாயஸ் ஸ்ரீ பண்டார, நிலேந்திர தேசப்பிரிய, பிரியந்த பிரதீப் குமார் மாபலகம, தனிந்து கௌசிக் விதானவசம், பிரசன்ன விஜிதரஞ்சன அமரதுங்க, ஜனேந்திர சம்பத் ரணசிங்க, புத்திக ஏகநாயக்க, ருவானி தமயந்தி திசேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓட்டமாவடியில் லொறி - மோட்டார் சைக்கிள்...

2024-11-10 11:53:59
news-image

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண் கொலை ;...

2024-11-10 11:12:15
news-image

லசந்த, தாஜூதீன் கொலைகளுக்கு நீதி வழங்கப்படும்...

2024-11-10 10:57:33
news-image

இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நாகரிகத்தின் இரட்டையர்கள்...

2024-11-10 10:51:16
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் தாயும் மகளும்...

2024-11-10 10:37:37
news-image

தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய...

2024-11-10 09:32:01
news-image

கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை...

2024-11-10 09:20:26
news-image

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார்...

2024-11-10 09:46:49
news-image

இன்றைய வானிலை

2024-11-10 07:07:34
news-image

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-09 18:33:44
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2024-11-09 18:07:08
news-image

மொனராகலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட...

2024-11-09 17:49:55