ஹுங்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் வேலைத்தளத்தில் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற வாகனத்திலிருந்து கண்ணாடியை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹுங்கம மேற்கு பகுதியை சேர்ந்த 45 வயது நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இந்த ஹோட்டலில் கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில், ஏழு கண்ணாடிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மீது திடீரென ஏழு கண்ணாடிகள் சரிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்ணாடிகள் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த தொழிலாளி தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM