ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டம் மருதானையிலிருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த பேரணியில் பெருமளவான மக்கள் ஒன்றுதிரண்டிருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் வீசப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இச்செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒரு வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது.

எவ்வாறாயினும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட மேதின பேரணிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.