கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து; இளைஞன் பலி ; பெண் காயம்

12 Oct, 2024 | 06:20 PM
image

நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரியுல்ல - மீரிகம வீதியில் லொலுவாகொட பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகமவிலிருந்து கிரியுல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இராணுவத்துக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அவ்வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் காயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மடுகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொக்கட்டிச்சோலையில் இருந்து வாவி ஊடாக ஆரையம்பதிக்கு...

2026-07-10 22:03:37
news-image

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலையின்...

2026-07-10 18:40:05
news-image

வடக்கில் இராணுவக் குறைப்பு மற்றும் பலாலி...

2026-07-10 18:38:06
news-image

தித்வா அனர்த்த நிதி திறைசேரியில் பாதுகாப்பாக...

2026-07-10 16:11:37
news-image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கௌரவத்தையும் உயர்த்துவதே அரசின்...

2026-07-10 20:53:55
news-image

ஒற்றையாட்சி, இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு வார்த்தையின்...

2026-07-10 14:30:42
news-image

சிறைச்சாலை வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் ;...

2026-07-10 13:21:14
news-image

பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இலங்கையின்...

2026-07-10 13:11:19
news-image

குழந்தை பிறப்பை அதிகரிக்க ஊக்கத்தொகை: நாடாளுமன்றத்தில்...

2026-07-10 16:01:53
news-image

துறைமுக நகர ஆணைக்குழுவுக்கு அதிக சம்பளம்;...

2026-07-10 14:45:23
news-image

கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உடனடி...

2026-07-10 14:31:38
news-image

கிழக்கு புகையிரத பிரச்சினைகளுக்கு நேரடி கள...

2026-07-10 15:31:04