இன்றைய சூழலில் எம்மில் பலரும் பல்வேறு பொருளாதார பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் விளிம்பு நிலை மற்றும் எளிய நிலையில் வாழும் மனிதர்கள் தங்களின் நாளாந்த பொருளாதாரத் தேவை ஆயிரக்கணக்கில் தான் இருக்கும் அது கிடைத்தால் மகிழ்ச்சி அடைவார்.
வேறு சிலர் சொந்த வீடு, வாகனம் ஆகியவற்றுடன் குடும்பத்தினை ஓரளவு மகிழ்ச்சியுடன் நடத்திக் கொண்டிருப்பர்.
ஆனாலும் பற்றாக்குறை காரணமாக இவர்களுக்கும் பணத்தின் தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும் .
இவர்களின் தேவை என்பது ஆயிரக்கணக்கில் இல்லாமல் மாதத்திற்கு லட்சத்திலும் ஆண்டிற்கு மில்லியனிலும் இருக்கும். இவர்களின் தேடல் இதனை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கும்.
வேறு சிலர் சொந்த வீடு, வாகனம் , நிறுவனம், விற்பனை நிலையம் , ஆகியவற்றுடன் வசதியாகவும், லட்சாதிபதியாகவும் வாழ்ந்து கொண்டிருப்பர்.
இவர்களின் பொருளாதார தேவை என்பது கோடிக்கணக்கில் இருக்கும். இதற்காக இவர்கள் தங்களின் தேவை கோடிக்கணக்கில் என்பதால் அதற்கேற்ற தேடலில் இருப்பர்.
வேறு சிலர் தற்போது கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களும் வெளியில் தெரியாத கடனாளியாகவே இருப்பர். இவர்களின் தேவையும் கோடிக்கணக்கில் இருக்கும்.
இப்படி பணத்தைப் பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல்வேறு வகையினதான எளிய வாழ்வியல் பரிகாரங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நாளாந்த ஆயிர கணக்கில் தன வரவு தேவை என கருதுபவர்கள்
சனிக்கிழமைகளில் சனி ஓரை தருணத்தில் அதாவது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை மதியம் ஒரு மணி முதல் 2:00 மணி வரை இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை சமைக்கக் கூடாது.
அந்த தருணத்திற்கு முன்னதாக சமைத்ததை பசியாற கூடாது. மேலும் சனி ஓரை தருணத்தில் அல்லது சனிக்கிழமை முழுவதும் மௌன விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகரை காலை , மாலை என இரண்டு வேளைகளிலும் வணங்கி வர வேண்டும்.
இந்த தருணத்தில் அரச மரத்தை வலம் வருவதும், இரண்டு அரச இலை மீது இரண்டு நெய் தீபத்தை ஏற்றி விநாயகப் பெருமானை வணங்கி வந்தால் நாளாந்தம் உங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆயிரக்கணக்கில் பணம் வந்து கொண்டே இருப்பதை அனுபவத்தில் காணலாம்.
லட்சக்கணக்கில் தன வரவு இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்
இஷ்ட தெய்வம் பரிகார தெய்வம் போன்ற தெய்வங்களை வழிபடுவதை விட குலதெய்வத்தை உறுதியாக பிடித்துக் கொண்டு இதனை மட்டுமே தொடர்ச்சியாக வழிபட்டுக் கொண்டே வந்தால் செல்வ வளம் உயரும். அதிலும் குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை அன்றும், குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாளிலும் வணங்க வேண்டும்.
குலதெய்வம் தெரியாதவர்கள் பௌர்ணமியில் மாவிளக்கு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி, அந்த தீபத்தை குலதெய்வமாக கருதி குலதெய்வத்தின் அனுகிரகத்தை அருளுமாறு பிரார்த்திக்க வேண்டும்.
அத்துடன் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஏழை எளிய வீட்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் அதாவது வளைகாப்பு திருவிழாவை நடத்த வேண்டும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
ஏழை எளிய வீட்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது குறிப்பாக மாங்கல்யத்தை தங்கத்தில் வாங்கித் தருவது சிறந்த பரிகாரம். இதனால் உங்களது செல்வ செழுமை மேலோங்கும். மேலும் ஏழை எளிய வீட்டு பெண்கள் தங்களுடைய குடும்ப பொருளாதார சூழல் காரணமாக தாலியை தங்கத் தாலியை அடமானம் வைத்திருந்தால் அதனை மீட்டு அவர்களுக்கு கொடுப்பதும் சிறந்த பரிகாரம் தான்.
தன வரவு கோடிக்கணக்கில் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள்
குபேர லட்சுமி பூஜை மற்றும் மகாலட்சுமி வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொண்டால் செல்வ வளம் உயரும்.
நிறுவனம் ,விற்பனை நிலையம் ,தொழிலகம் ,அலுவலகம் , ஆகியவற்றை நடத்தும் தொழிலதிபர்கள் விஜயதசமி தினத்தன்று சண்டி ஹோமம் செய்தால் செல்வம் மேலும் பெருகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அசைக்க முடியாத அளவிற்கு சிறப்பாக உயர்ந்து கொண்டே இருக்கும்.
தன தாட்சாயினி வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
சிலருக்கு மேற்கூறிய பரிகாரங்கள் உரிய பலனை வழங்கவில்லை என்றவுடன் மனச்சோர்வு அடைய வேண்டாம். பொதுவாக நவ கிரகங்களில் தனத்தை அள்ளித் தரும் கிரகங்கள் என குறிப்பிடப்படும் சுக்கிரன், குரு, சனி ,செவ்வாய், ராகு , ஆகிய கிரகங்களை முறையாக சாந்தி செய்து அவர்களது அருளைப் பெற்றாலும் பணவரவு பெருகும்.
நெல்லிக்கனியை எடுத்துக் கொள்ளவும். அதனை பன்னீரில் சிறிதளவு தேய்த்துக்கொண்டு, அதனை நெற்றியில் இட்டுக் கொள்ளவும். இதனால் பெண்களால் ஏற்பட்ட பிரச்சனையும் சொத்தால் ஏற்படும் பிரச்சனையும் தீர்வை நோக்கி பயணித்து அதனூடாக பணவரவு கிடைக்கும்.
பஞ்ச கவ்யத்தை பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் பொருளாதார வளம் உயரும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அஞ்சனக்கல் எனும் மூலிகையை வாங்கி அதனை உங்களுடன் வைத்திருங்கள். அஞ்சனக் கல்லை சிறிதளவு நெய் மற்றும் குங்குமப்பூவினை கலந்து நுணுக்கி திலகமாக வைத்தாலும் பொருளாதார வளர்ச்சி உண்டு. அஞ்சனக்கல் மூலிகையை நல்லெண்ணெய் கலந்து திலகமாக இட்டால் கண் திருஷ்டியும் விலகும். பொருளாதார வளமும் உயரும்.
அரச மரத்தை காலை- மாலை என இரண்டு வேளைகளிலும் சுற்றி வந்தாலோ அல்லது 24 நிமிடம் அந்த அரச மரத்தடியில் இருந்தாலோ அதிலிருந்து வெளியாகும் சுத்தமான ஓக்சிஜன் காற்று உங்களது சுவாச மண்டலம் வழியாக உட்பகுந்து, உங்களது உடலில் உள்ள ஏழு சக்கரங்களை இயக்கி அதனூடாக செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும்.
ஆன்மீக பொருட்களை விற்பனை செய்யும் நிலையத்தில் கிடைக்கும் பாதரச லிங்கத்தை வாங்கி வந்து முறைப்படி வழிபட்டால் கோடீஸ்வரன் ஆகலாம். நாகாபரணம் தரித்த சிவபெருமானை வழிபட்டாலும் கோடீஸ்வரன் ஆகலாம்.
இவை அனைத்தும் அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரம் என்பதால் இதனை நீங்களும் பயன்படுத்தி தனவந்தர் ஆகி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை கொண்டாடுங்கள்.
தொகுப்பு ; சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM