விஜய் சேதுபதி - சூரி நடிக்கும் 'விடுதலை பார்ட் 2 ' படத்தின் அப்டேட்

Published By: Digital Desk 2

12 Oct, 2024 | 04:35 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி , சூரி ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.‌

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை பார்ட் 2' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, அனுராக் காஷ்யப், மஞ்சு வாரியர், போஸ் வெங்கட், கிஷோர், கென் கருணாஸ், ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, வின்சென்ட் அசோகன், சேத்தன்  உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை ஆர் எஸ் இன்போடெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

விடுதலை பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதால் தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளில் முதன்மையான டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது.‌ 

இந்தத் திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, சூரி, வெற்றிமாறன், இளையராஜா , கூட்டணியில் வெளியான விடுதலை படத்தின் முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சித்தார்த் நடிக்கும் 'மிஸ் யூ' திரைப்படத்தின்...

2024-11-12 13:24:28
news-image

டெல்லி கணேஷ் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

2024-11-11 18:57:06
news-image

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2 '...

2024-11-11 18:57:21
news-image

ஆனந்தராஜ் நடிக்கும் 'மதராஸ் மாஃபியா கம்பெனி...

2024-11-11 17:19:38
news-image

புதிய சாதனையை படைத்திருக்கும் சிவகார்த்திகேயன்

2024-11-11 15:54:26
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் நடிக்கும் 'கேம்...

2024-11-11 15:54:05
news-image

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்'...

2024-11-11 14:35:34
news-image

சூர்யாவின் 'கங்குவா' படத்தின் புதிய முன்னோட்டம்...!?

2024-11-11 14:23:51
news-image

டெல்லி கணேஷ் காலமானார்

2024-11-10 08:39:30
news-image

ஆர். ஜே. பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்'...

2024-11-09 19:49:47
news-image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'பி பி...

2024-11-09 16:54:56
news-image

சசிகுமார் நடிக்கும் 'ஃப்ரீடம் ஓகஸ்ட் 14'...

2024-11-09 19:51:12