இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 5 இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த ஐவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதிவான் அலெக்ஸ் ராஜா கிரேசின் உத்தரவிட்டுள்ளார்.

மன்னாருக்கு வடக்கேயுள்ள இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 5 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து படகு மற்றும் வலைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் மேதில விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைத்த நிலையில், குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.