நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் வெற்றிகரமாக நிறைவு

Published By: Robert

12 Jan, 2016 | 03:08 PM
image

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சனை திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார். 

தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன், குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி மற்றும் இதர உதவிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன் விவரங்களை சேகரித்து பதிவு செய்ய 2 நாள் முகாம் ஜனவரி 9, 10 திகதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கியது. 

11 மையங்களில் சங்க அலுவலக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த 2 நாள் முகாம் பற்றிய விபரங்கள் வருமாறு.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட உறுப்பினர்களுக்கான முகாம் சங்க மேலாளர் பாலமுருகன், நடிகர் அயூப் கான் மேற்பார்வையில் கோவையில் நடைபெற்றது. சேலம், தர்மபுரி மாவட்ட முகாம் நடிகை கோவை சரளா மேற்பார்வையில் சேலத்திலும், நாமக்கல் மாவட்ட முகாம் நடிகர் நந்தா மேற்பார்வையில் நாமக்கலிலும், கரூர், திண்டுக்கல் மாவட்ட முகாம் நடிகர் விக்னேஷ் மேற்பார்வையில் கரூரிலும், காரைக்குடி, சிவகங்கை மாவட்ட முகாம் நடிகை ராதா மேற்பார்வையிலும், புதுக்கோட்டை மாவட்ட முகாம் நடிகர் ஆரி மேற்பார்வையில் புதுக்கோட்டையிலும், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட முகாம் நடிகர் ஹேமசந்திரன் மேற்பார்வையில் அரியலூரிலும், நாகை மாவட்ட முகாம் நடிகர் பசுபதி மேற்பார்வையில் தஞ்சாவூரிலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட முகாம் நடிகர் மனோபாலா மேற்பார்வையில் புதுச்சேரியிலும், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட முகாம் நடிகர் உதயா மேற்பார்வையில் மதுரையிலும், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முகாம் நடிகர் பிரேம் மேற்பார்வையில் ஆரணியிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட முகாம் நடிகை சோனியா மேரபார்வையில் ஸ்ரீபெரம்பத்தூரிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 

நடிகர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் நியமன உறுப்பினர்களும் முகாம் ஒருங்கினைப்பாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பணியாற்றி முகாமை நிறைவு செய்து திரும்பியுள்ளனர். 

சென்னையில் மட்டும் இம்முகாமின் மீதமுள்ள பணி அதுவும் கூடிய விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தென்னிந்திய நடிகர் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45