மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும்

Published By: Digital Desk 3

12 Oct, 2024 | 08:59 AM
image

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற  மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லி மீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல்

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு , காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் காற்றின் வேகமானது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 - 60 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும்...

2026-05-13 02:22:17
news-image

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சுயாதீனம் பாதுகாக்கப்பட...

2026-05-13 02:01:04
news-image

புலிகள் அமைப்பை அழித்த மஹிந்த ராஜபக்ஷவை...

2026-05-13 01:37:26
news-image

ஜனாதிபதியின் கருத்து நீதித்துறை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்?...

2026-05-12 16:03:13
news-image

உயர்கல்வி வாய்ப்பை வெறும் நிதி உதவியாக...

2026-05-12 16:59:29
news-image

நிதியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான...

2026-05-12 16:54:14
news-image

மகிழ்ச்சிக்குப் பதிலாக துயரத்தை விதைக்கும் மக்கள்...

2026-05-12 17:30:10
news-image

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் 600 மில்லியன்...

2026-05-12 17:47:24
news-image

எந்தவொரு அரசாங்கமும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது...

2026-05-12 17:37:46
news-image

போக்குவரத்து பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதிப்...

2026-05-12 20:40:47
news-image

மே மாதத்தின் முதல் 10 நாட்களில்...

2026-05-12 19:24:52
news-image

காலி துப்பாக்கிச் சூடு : சந்தேக...

2026-05-12 19:05:47