வாள்வெட்டில் காயமடைந்தவர் மரணம் - பலி எண்ணிக்கை இரண்டாக உயர்வு

Published By: Vishnu

11 Oct, 2024 | 10:29 PM
image

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் சாவடைந்தார்.

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில்  காணி தொடர்பான முரன்பாடு வியாழக்கிழமை (10) வாள்வெட்டில் முடிந்தது. 

குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவித்தனர். 

இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்தார். சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46