நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகள், 11 சுயேச்சைக் குழுக்கள் போட்டி

Published By: Vishnu

11 Oct, 2024 | 09:03 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடத் தகுதி.

2024 பொதுத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்களுக்கான வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்காக இன்று நண்பகல் 12 மணிக்கு நுவரெலியா மாவட்டத்திற்கு, 15 சுயேச்சைக் குழுக்களும், 20 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் வேட்புமனு தாக்கல் செய்தன.

04 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் அருணலு மக்கள் முன்னணி ஆகியன சமர்ப்பித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்;

மக்கள் போராட்டக் கூட்டணி,

ஜன சேதா முன்னணி,

சோசலிச சமத்துவக் கட்சி,

இரண்டாம் தலைமுறை,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,

ஐக்கிய மக்கள் சக்தி,

தேசிய ஜனநாயக முன்னணி,

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி,

சர்வசன அதிகாரம்,

தேசிய மக்கள் சக்தி,

ஐக்கிய ஜனநாயகக் குரல்,

ஜனநாயக தேசியக் கூட்டணி,

ஜனநாயக இடதுசாரி முன்னணி,

ஐக்கிய தேசிய கட்சி,

சமபீம கட்சி,

திராவிட ஐக்கிய விடுதலை முன்னணி,

ஐக்கிய சோசலிசக் கட்சி போட்டியிடவுள்ளதுடன், 11 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46