நடைபெறவுள்ள பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 308 பேர் போட்டியிடுகின்றனர்!

12 Oct, 2024 | 08:48 AM
image

நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு  17 அரசியல் கட்சிகளிலும் 11 சுயேச்சை குழுக்களிலும் 308 பேர் போட்டியிடுகின்றனர்.  

ஆங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சியும் 4 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதன்படி ஈரோஸ் ஜனநாயக முன்னணி அருணலு மக்கள் கட்சி தேசிய மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டன.  

ஜக்கிய மக்கள் சக்தியுடன் தமுகூயும் ஜக்கிய தேசிய கட்சியுடன் இ.தொ.காவும் தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுன தனித்தும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டி. 

ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் திகா ராதா உதயாவும் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜீவன் ரமேஸ் சக்தி மற்றும் திருமுருகன் ஆகியோரும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.   

இதற்கான வேட்புமனு இன்று வெள்ளிக்கிழமை (11)  தாக்கல் செய்யப்பட்டது.  

ஏதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆமி திகதி நடைபெறவுள்ள பத்தாவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 17 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும் 11  சயேச்சை குழுக்கள் சார்பிலும் 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

நுவரெலியா மாவட்டத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நுவரெலியா மஸ்கெலியா (இரட்டை தொகுதி) வலப்பனை கொத்மலை ஹங்குரன்கெத்த ஆகிய நான்கு தொகுதிகளில் இருந்து 605292 வாக்காளர்கள் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சiஎ உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் மற்றும் மலரும் மலையகம் அமைப்பின் தலைவர் சதானந்தன் திருமுருகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாச நிமல் பியதிஸ்ஸ மற்றும் நதீர ஹேவாவசம் சுனில் குமாரசிங்க பிரியன்த பண்டார ஏரத் கல்யாணி சத்தரசிங்க கே.தசநாயக்க ஆகிய 11 பேரும் 

ஜக்கிய மக்கள் சக்தி சார்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் பாபு சாய்பு ரம்லான்டீன் ஜயலத் பண்டார திசாநாயக்க அசோக சேபால இரண்யா ஏரத் ஜயலத் பண்டார நந்தன நாகன்தலாவ சுமித் அத்தநாயக்க ஏகாம்பரம் சோபனா ஆகிய 11 பேரும் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.  

இதே வேளை ஜக்கிய ஜனநாயக குரல் எனும் அரசியல் கட்சியின் சின்னமான ஒலிவாங்கி மைக் சின்னத்தின் சார்பில் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் சான் பிரதீஸ் முன்னாள் அமைச்சர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மகள் அனுசா சந்திரசேகரன் உட்பட 11 பேர் போட்டியிடுகின்றனர்.கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அனுசா சந்திரசேகரன் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் 5 உறுப்பினர்களும் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் 3 உறுப்பினர்களும் வெற்றிபெற்றனர். 

பொதுஜன பெரமுன சார்பில் ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ராமேஸ்வரன் எஸ்.பி.திசாநாயக்க சீ.பி.ரட்ணாயக்க நிமல் பிளதிஸ்ஸ ஆகியோர் வெற்றிபெற்றனர்.ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார்  ஆகியோரும் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றனர். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.திசாநாயக்க சீ.பி.ரட்ணாயக்க ஆகிய இருவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரம் கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிமல் பியதிஸ்ஸ மற்றும் இ.தொ.கா உறுப்பினர்கள் இம்முறை ஜக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுகின்றனர். 

3 அரசியல் கட்சிகளும் 4 சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலை கடந்த ஜனாதிபதி தேர்தலை போல அமைதியான தேர்தலாக நடாத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும்  நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான நந்தன கலபொட குறிப்பிடுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-14 12:47:24
news-image

திருகோணமலையில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:13:23
news-image

வவுனியாவில் சுமூகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 12:07:28
news-image

கொழும்பு வெள்ளவத்தையில் அமைதியான முறையில் மக்கள்...

2024-11-14 12:27:01
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,822...

2024-11-14 11:45:05