(எம்.மனோசித்ரா)
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் இறுதி நேரத்தில் வேட்புமனு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (11) அவர் இரத்தினபுரி மாவட்ட செயலகத்துக்கு சென்ற போதே தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்ததாக தமிதா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே, தன்னை இரத்தினபுரி மாவட்டத்தில் களமிறங்குமாறு அழைப்பு விடுத்ததாகவும் இவ்வாரம் அதனை அவர் உறுதி செய்ததாகவும் தமிதா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் வியாழக்கிழமை இரவு தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக ஹேஷா தன்னிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தொகுதி அமைப்பாளர்களுடன் பேசிய போது அவர்கள் அவ்வாறு எதுவும் தன்னிடம் கூறவில்லை என்றும் தமிதா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவே தமிதாவின் பெயரை நீக்கியதாக ஹேஷா குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வினவுவதற்காக ரஞ்சித் மத்தும பண்டாரவை தொலைபேசியில் அழைத்த போது அவர் பதிலளிக்கவில்லை என்றும், கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனக்கு நியாயத்தை வழங்குவதாகவும் உறுதியளித்ததாக தமிதா தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தமிதா அபேரத்னவின் பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ஹேஷா விதானகே, இரத்தினபுரி மாவட்ட உறுப்பினர்கள் அவரது பெயரை உள்ளடக்குவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிதா அபேரத்ன ஐக்கிய மக்கள் சக்திக்காக முக்கிய பங்கு வகித்திருந்தாலும், தேர்தலில் தமது மாவட்டத்திற்கு வெளியில் இருந்து ஒரு வேட்பாளரை நிறுத்த விரும்பவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM