தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும் குழந்தைகளுக்கான நாளமில்லா உட்சுரப்பு மருத்துவ சிகிச்சை ..!?

Published By: Digital Desk 2

11 Oct, 2024 | 04:43 PM
image

இன்றைய சூழலில் இளைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையினதான சிக்கல்கள் உருவாகிறது. 

குறிப்பாக பத்து வயதிற்குள்ளாகவே பெண் பிள்ளைகள் பூப்படைகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்போது குழந்தைகளுக்கான நாளமில்லா உட்சுரப்பு மருத்துவ சிகிச்சை தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறக்கும் குழந்தைகள் அந்தந்த வயதிற்குரிய வளர்ச்சியை பெறவில்லை என்றாலோ குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் விரைவில் பூப்பெய்தினாலோ குழந்தைகள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாகவோ அல்லது உடற்பருமனாகவோ இருந்தாலோ அல்லது குழந்தைகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அவர்களுக்கான சிகிச்சையை இத்தகைய பிரிவு வைத்திய நிபுணர்கள் துல்லியமாக அவதானித்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியின் போது அவர்களுடைய உடலில் உள்ள ஹோர்மோன்களின் சுரப்பிகளில் சமச்சீரான தன்மை இருக்க வேண்டும். 

இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதன் காரணமாக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.  பிட்யூட்டரி, தைரொய்ட், பாரா தைரொய்ட் உள்ளிட்ட நாளமில்லா உட்சுரப்பிகளின் அமைப்பு  மற்றும் செயல்பாட்டில் நிகழும் இடையூறு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சையை அளித்து நிவாரணத்தை வழங்குவதும் இவ்வகையினதான வைத்திய நிபுணர்கள் தான். அதனுடன் பெண் பிள்ளைகள் மிக விரைவாக பூப்படைவதையும் மிகவும் தாமதமாக பூப்படைவதற்கான காரணத்தையும் கண்டறிந்து அதற்கான நிவாரணத்தையும் இவர்கள் வழங்குகிறார்கள்.

மூன்று வயது முதல் பத்து வயதிற்குள்ளாகவே இளம் வயது சர்க்கரை நோய் பாதிப்பிற்கு ஆளாகுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள்.  

இவற்றில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டு வகையினதான சர்க்கரை நோயாளிகளும் உள்ளனர். இவர்களுக்கான சிகிச்சையும் , ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான அட்டவணையையும் நாளமில்லா உட்சுரப்பியல் வைத்தியர்கள் வழங்குகிறார்கள்.

வைத்தியர் நிகில்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10