தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நவீன் சந்திரா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' லெவன் ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'உலகநாயகன்' கமல்ஹாசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தில் நவீன் சந்திர, ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, 'ஆடுகளம்' நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார் .
புலனாய்வு பாணியிலான இந்த திரைப்படத்தை ஏ ஆர் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ' தி டெவில் இஸ் வெயிட்டிங்' என ஆங்கில மொழியில் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை இயக்குநரும், பாடலாசிரியருமான லோகேஷ் அஜில்ஸ் எழுத, நடிகையும், பின்னணி பாடகியுமான ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார்.
டி. இமானின் மயக்கும் இசை மெட்டுகளில் ஸ்ருதிஹாசனின் குரலில் இந்தப் பாடல் ஒலிப்பதால் இளைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM