அசோக் செல்வன் நடிக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 2

11 Oct, 2024 | 04:41 PM
image

பட மாளிகை, டிஜிட்டல் தளம், தொலைக்காட்சி, என திரைப்படத்துறை வணிகம் சார்ந்த சந்தைகளில் தனக்கான வணிக மதிப்பினை உயர்த்திக் கொண்டு வரும் நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதை நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எனக்கு தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படத்தில் அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள் எம். எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், படவா கோபி , விஜய் வரதராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 

காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். திருமலை தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. 

இதன் காரணமாக வெளியிடு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் அசோக் செல்வனின் நடிப்பில் உருவாகி இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' எனும் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றதாலும் 'எனக்குத் தொழில் ரொமான்ஸ்' எனும் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை பின்னணியில் உருவாகி இருப்பதாலும் இந்த படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே ஆதரவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிக்கும் '...

2025-01-21 15:48:35
news-image

புதுமுக நடிகர் ஹரி பாஸ்கர் நடிக்கும்...

2025-01-21 15:48:01
news-image

சந்தானம் நடிக்கும் 'தில்லுக்கு துட்டு நெக்ஸ்ட்...

2025-01-21 15:47:45
news-image

குரு சோமசுந்தரம் நடிக்கும் ' பாட்டல்...

2025-01-20 17:43:05
news-image

இயக்குநராகவும் வெற்றி பெற்ற நடிகை தேவயானி

2025-01-20 17:12:25
news-image

மணிகண்டன் நடிக்கும் 'குடும்பஸ்தன்' படத்தின் முன்னோட்டம்...

2025-01-20 17:12:09
news-image

வாரிசு அரசியலை பகடியாக பேசும் 'குழந்தைகள்...

2025-01-20 17:11:25
news-image

சிவ பக்தரின் புராண சரித்திரத்தை பேசும்...

2025-01-20 16:48:03
news-image

அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின்...

2025-01-20 16:26:33
news-image

நடிகை சோனியா அகர்வால் நடிக்கும் 'WILL'...

2025-01-18 16:13:54
news-image

நடிகை ரூபா நடிக்கும் 'எமகாதகி '...

2025-01-18 16:13:40
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'...

2025-01-18 16:13:23