இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இதன்பிரகாரம் நாட்டின் ஐக்கியத்தை நிலைநாட்டும் முகமாக அரசியல் தீர்வினை இவ்வருடத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என நம்புகின்றோம். இதற்கிணங்க இன்னும் இரு மாதத்திற்குள் புதிய அரசியலமைப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க முடியும். குறித்த அறிக்கையை மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் முன்வைத்து ஆலோசனை கோருவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு நல்க வேண்டும். நாட்டை பிளவுப்படுத்தாமல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும். மேலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகளை பெற்றுக்கொடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM