(நெவில் அன்தனி)
பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் இங்கிலாந்து அபார வெற்றியீட்டியது.
போட்டியின் கடைசி நாளான இன்று வெள்ளிக்கிழமை (11) காலை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து மீள்வதற்கு மேலும் 115 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், சகல விக்கெட்களையும் 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து இன்னிங்ஸால் தோல்வி அடைந்த முதலாவது அணி என்ற பெயரை வரலாற்று ஏடுகளில் பாகிஸ்தான் பதித்துக்கொண்டது.
ஷான் மசூதின் டெஸ்ட் கிரிககெட்டில் தலைமையில் பாகிஸ்தான் அடைந்த 6ஆவது நேரடி டெஸ்ட் தோல்வி இதுவாகும்.
இப் போட்டி, கடைசி நாளான இன்றைய பகல் போசன இடைவேளைக்கு சற்று முன்னர் நிறைவுக்கு வந்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஆட்டம் இழக்காமல் இருந்த சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய இருவரும் இன்று காலை திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பூர்த்தி செய்தனர்.
அத்துடன் 7ஆவது விக்கெட்டில் 109 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஆனால், அகாவின் விக்கெட் உட்பட இன்றைய தினம் வீழ்ந்த 3 விக்கெட்களையும் ஜெக் லீச் கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றியை உறுதிசெய்தார்.
கடைசி ஆட்டக்காரர் அப்ரார் அஹ்மத் சுகவீனம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.
இந்தப் போட்டியில் இன்னிங்ஸால் வென்ற இங்கிலாந்து, 48 வருடங்களின் பின்னர் ஆசிய கண்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.
டெல்லியில் 1976ஆம் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலேயே ஆசிய கண்டத்தில் கடைசியாக இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் இதே மைதனாத்தில் அக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமாவதுடன் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் அக்டோபர் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
எண்ணிக்கை சுருக்கம்
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 556 (ஷான் மசூத் 151, சல்மான் அகா 104, அப்துல்லா ஷபிக் 102, சவூத் ஷக்கீல் 82, ஜெக் லீச் 160 - 3 விக்., ப்றைடன் காஸ் 74 - 2 விக்., கஸ் அட்கின்சன் 99 - 2 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: 823 - 7 விக். டிக்ளயார்ட் (ஹெரி ப்றூக் 317, ஜோ ரூட் 262, பென் டக்கட் 84, ஸக் க்ரோவ்லி 78, சய்ம் அயூப் 101 - 2 விக்.), நசீம் ஷா 157 - 2 விக்.)
பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 260 (சல்மான் அகா 63, ஆமிர் ஜமால் 55 ஆ.இ., சவூத் ஷக்கீல் 29, சய்ம் அயூப் 25, கஸ் அட்கின்சன் 28 - 2 விக்., ப்றைடன் காஸ் 39 - 2 விக்.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM