காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று (30) இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர்  இன்று (01) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புதிய காத்தான்குடி பைசால் வீதியைச் சேர்ந்த லீம் சப்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் புதிய காத்தான்குடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மேலும் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நண்பர்களான குறித்த நான்கு இளைஞர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் போட்டிக்காக ஒடும்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.