ஓமந்தையில் காணி பிணக்கு காரணமாக வாள்வெட்டு: ஒருவர் மரணம்- மேலும் ஒருவர் படுகாயம்

Published By: Vishnu

11 Oct, 2024 | 03:28 AM
image

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை (10.10) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாகச் சிறிய பிணக்கு ஒன்று இருந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் குறித்த இருவர் மீதும் மிளகாய்த் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சைப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் ரயிலில் மோதி ஒருவர் பலி!

2025-01-14 11:03:45
news-image

நீர்கொழும்பில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-01-14 10:50:53
news-image

அத்துருகிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2025-01-14 10:35:01
news-image

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு!

2025-01-14 10:24:58
news-image

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர

2025-01-14 10:24:11
news-image

அரசியல் கைதிகளென எவரும் தடுத்து வைக்கப்படவில்லை...

2025-01-13 18:03:53
news-image

இன்றைய வானிலை 

2025-01-14 06:20:58
news-image

இலங்கைக்கும் உலகுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு...

2025-01-13 17:21:39
news-image

தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டை உலகுக்கு...

2025-01-14 10:58:38
news-image

வலிகள் நீங்கி வளமான நாட்டிற்கும் அதன்...

2025-01-13 18:17:37
news-image

ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும் - இந்துக்...

2025-01-13 18:21:56
news-image

அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு ஆளும் காட்சியால்...

2025-01-13 18:01:30