வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல்

Published By: Vishnu

10 Oct, 2024 | 08:25 PM
image

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு,முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (10)  தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய தோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது,

குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார்.

புதன்கிழமை(9) குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்ற மையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர்.

இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை (10) இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24