மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பெண் பலி

Published By: Digital Desk 2

10 Oct, 2024 | 09:09 PM
image

அவிசாவளை - கொழும்பு வீதியில் பாதுக்க மாவத்தகம கொடிகஹகந்த மாவத்தைக்கு அருகில்  இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக  பாதுக்க பொலிஸார் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிள்களும்  பஹத்கமையில் இருந்து மீபே நோக்கி பயணித்துள்ளதுடன்,  அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது உயிரிழந்த பெண்ணின் கணவரும் மற்றைய மோட்டார் சைக்கிளின் சாரதியும் சிறு காயங்களுடன் பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மசாஜ் செய்வதாகக் கூறி வைத்தியரிடம் கொள்ளை...

2024-11-12 13:30:38
news-image

பியூமி ஹன்சமாலி, விரஞ்சித் தம்புகலவின் விசாரணைகளைத்...

2024-11-12 13:26:34
news-image

அக்கரப்பத்தனையில் வீடுடைத்து திருட்டு ; சந்தேக...

2024-11-12 12:20:13
news-image

கொழும்பு - அவிசாவளை வீதியில் பஸ்...

2024-11-12 12:06:39
news-image

காணாமல்போயிருந்த மூதாட்டி வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு!

2024-11-12 11:54:43
news-image

கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

2024-11-12 11:37:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-12 12:03:44
news-image

வடக்கு கடலில் வைத்து 12 இந்திய...

2024-11-12 11:28:13
news-image

தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம்...

2024-11-12 11:26:36
news-image

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர்...

2024-11-12 11:16:20
news-image

பலாங்கொடையில் வயலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2024-11-12 11:03:03
news-image

அறுகம்குடா பயணஎச்சரிக்கையை அமெரிக்க நீக்கவேண்டும் -...

2024-11-12 10:49:23