இன்றைய பரபரப்பான சமூகங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், பிலியந்தலையிலும், கடுவலையிலும் இரண்டு புதிய டிஜிட்டல் வலயங்களை அங்குரார்ப்பணம் செய்திருப்பதை பான் ஏஷியா வங்கி மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த விரிவாக்கமானது நவீன வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்கும் நிதிச் சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் வங்கி மேற்கொண்டுள்ள ஆணித்தரமான உறுதிப்பாட்டின் ஒரு பிரதிபலிப்பாகும்.
வாடிக்கையாளர்கள் பரந்த அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் மண்டலங்கள், தானியங்கிப் பரிவர்த்தனை இயந்திரங்கள் (ATM) மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை 24/7 அடிப்படையில் தடையின்றி, துரித கதியில் மேற்கொள்ள முடியும்.
அத்துடன் சிறப்பான கணக்கு முகாமைத்துவத்துக்கான ஸ்மார்ட் பேங்கிங் கணிப்பொறியகங்கள் (கியோஸ்க்) வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த இரு டிஜிட்டல் வலயங்களிலும் வாடிக்கையாளர்கள் மென்மையான மற்றும் திறமையான வங்கி அனுபவத்தை எதிர்பார்க்கலாம்.
பான் ஏஷியா வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க இந்த புதிய டிஜிட்டல் வலயங்கள் பற்றிக் கருத்து தெரிவிக்கையில் “டிஜிட்டல் வங்கிச் சேவையின் எழுச்சியுடன் எமது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அவர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவது மிகவும் முக்கியமானது.
இந்த இரண்டு புதிய டிஜிட்டல் மண்டலங்களும் எளிதில் அணுகக்கூடிய, பாதுகாப்பான மற்றும் புதுமையான வங்கி அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு ஒரு மேலதிக சான்றாகும்" என்றார்.
இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் செயலாளருமான நயந்த பெர்னாண்டோ, உதவிப் பொது முகாமையாளர் -வைப்புத் திரட்டல் புத்திக பெரேரா ஆகிய இருவரும் பான் ஏஷியா வங்கியின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் சகிதம் கலந்துகொண்டனர்.
இந்த புதிய திறப்புகள் ஹோமாகம, பாணந்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கட்டுகஸ்தோட்டை, கண்டி மற்றும் பல உட்பட நாடு முழுவதும் டிஜிட்டல் வலயங்களை நிர்மாணிப்பதற்கு பான் ஏஷியா வங்கி மேற்கொண்டுள்ள பரந்த அளவிலான திட்டத்தின் ஒரு பகுதியாகும் ஒவ்வொரு டிஜிட்டல் மண்டலத்திலும், பான் ஏசியா வங்கி தனது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற புதுமையான வங்கித் தீர்வுகளை வழங்குவதற்கும் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துள்ளது.
படவிளக்கம் ;
நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் செயலாளருமான நயந்த பெர்னாண்டோ, உதவிப் பொது முகாமையாளர் - வைப்புத் திரட்டல் புத்திக பெரேரா ஆகிய இருவரும் பான் ஏஷியா வங்கியின் வாடிக்கையாளர்கள் சகிதம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM