150 ஆவது உலக தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விசேட தபால் முத்திரைகள் கையளிக்கப்பட்டதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலக தபால் தினத்தை முன்னிட்டு நேற்று (09) நடை பெற்ற விசேட நிகழ்விற்கு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட போதே பரிசாக இந்த தபால் முத்திரைகள் கையளிக்கப்பட்டது.
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த தபால் முத்திரைகள் உத்தியோகப்பூர்வமானது இல்லை எனவும் இதனைத் தபால் சேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் தங்களது தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி இவ்வாறான தபால் முத்திரைகளை உருவாக்க முடியும் எனவும் ஆனால் அவற்றைத் தபால் சேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது எனவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM