நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரிக்கக் கூடும்

Published By: Digital Desk 7

10 Oct, 2024 | 09:03 AM
image

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றர் இலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லி மீற்றர் இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு , காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் காற்றின் வேகமானது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றர்  ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள்...

2026-04-22 19:39:24
news-image

$2.5 மில்லியன் சென்றது யாருடைய கணக்கிற்கு?...

2026-04-22 19:37:40
news-image

நடிகர் சூர்யாவின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த இலங்கையை...

2026-04-22 17:54:46
news-image

சுரேஷ் சலே தொடர்ந்து தடுப்புக் காவல்...

2026-04-22 19:20:21
news-image

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின்...

2026-04-22 16:40:18
news-image

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு! ...

2026-04-22 18:59:25
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்...

2026-04-22 18:57:14
news-image

கஹவத்தை நீலகாமம் தோட்டத் தொழிலாளியின் வீடு...

2026-04-22 18:21:46
news-image

தேசிய மக்கள் சக்தியின் மலையக அமைச்சர்கள்...

2026-04-22 18:13:23
news-image

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான...

2026-04-22 17:47:49
news-image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு...

2026-04-22 17:46:33
news-image

யாழில் தந்தையும் மகனும் விபத்தில் உயிரிழப்பு 

2026-04-22 17:25:26