தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம், வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடை­யா­கவும் தொழி­லா­ளர்­களின் முயற்­சி­களை நினைவு கூர்­வ­தற்­கான ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் தமது மே தினக் கொண்­டாட்­டத்தை அமைத்துக் கொள்­ளு­மாறு அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­டமும் நான் வேண்­டுகோள் விடுக்க விரும்­பு­கின்­றேன் என்று தமிழ்க் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான   இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். 

சர்­வ­தேச தொழி­லாளர் தினத்தை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள செய்­தியில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

சர்­வ­தேச தொழி­லாளர் தினம் என்­பது தொழி­லாளர் வர்க்­கத்­தி­னரின் வெற்­றிக்கு வர­வேற்­பினை பெற்றுக் கொடுப்­ப­தற்கும்இ உல­கவாழ் மக்­களின் பொரு­ளா­தார மற்றும் சமூக உரி­மை­களைப் பா-து­காப்­ப­தற்­கா­கவும் தியா­கங்­களைச் செய்த தொழி­லா­ளர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்­து­வ­தற்கும் கிடைக்கப் பெற்­றுள்ள ஒரு சந்­தர்ப்­ப­மாகும்.

தற்­போ­தைய நிலைக்கு இலங்­கையை கொண்டு வரு­வ­தற்­காக பல வருட கால­மாக தொழி­லாளர் வர்க்­கத்­தினர் முக்­கிய பங்­க­ளிப்புச் செலுத்­தி­யுள்­ளனர். அதனால் எமது நாட்டின் முன்­னேற்றம் மற்றும் அபி­வி­ருத்­தியின் பொருட்டு தமது சக்­தியை ஈடு­ப­டுத்தி சேவை­யாற்­றிய தொழி­லாளர் வர்க்­கத்­தி­ன­ருக்கு எனது மன­மார்ந்த நன்­றி­யினை இச்­சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்ள விரும்­பு­கின்றேன்.

எமது நாடா­னது தற்­போது வர­லாற்­றில் ஒரு முக்­கிய கட்­டத்­தினை அடைந்­துள்­ளது. எனவே தேசிய அபி­வி­ருத்­திக்­காக சிறப்­புடன் பணி­யாற்றும் அதேவேளை தேசிய ஒற்­றுமை மற்றும் நல்­லி­ணக்கம் என்­ப­வற்­றினை அடைந்து கொள்­வ­தற்­காக உணர்ச்­சி­பூர்­வ­மாக அர்ப்­ப­ணிப்­புடன் பணி­யாற்­று­மாறும் தொழி­லாளர் வர்க்­கத்­திடம் வேண்­டிக்­கொள்ள நான் விரும்­பு­கின்றேன்.

இறு­தி­யாகஇ இந்­நாளில் தொழி­லாளர் வர்க்­கத்தின் போராட்டம்இ வெற்றி மற்றும் அவர்கள் முகம்­கொ­டுத்து வரு­கின்ற சவால்கள் என்­ப­வற்­றினை முன்­னி­லைப்­ப­டுத்தி அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் ஒரு மேடையாகவும் தொழிலாளர்களின் முயற்சிகளை நினைவு கூர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் தமது மே தினக் கொண்டாட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்று அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.