(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற சாதனையை ஜோ ரூட் இன்று புதன்கிழமை (09) படைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 71ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் அலிஸ்டெயா குக்கின் 12472 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்து ஜோ ரூட் முன்னிலை அடைந்தார்.
கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டுவரும் அப் போட்டியில் ஜோ ரூட் சதம் குவித்து அசத்தினார்.
தனது 147ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 35ஆவது சதத்தைப் பூர்த்திசெய்ததுடன் இதுவரை 12578 ஓட்டங்களை மொத்தமாக பெற்று இங்கிலாந்துக்கான சாதனையாளரானார்.
அவருக்கு பக்கபலமாகத் துடுப்பெடுத்தாடி வரும் ஹெரி ப்றூக் தனது 6ஆவது சதத்தைக் குவித்து அசத்தினார்.
அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 243 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 492 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஜோ ரூட் 277 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள் உட்பட 176 ஓட்டங்களுடனும் ஹெரி ப்றூக் 173 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 141 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
அவர்களைவிட பென் டக்கட் 84 ஓட்டங்களையும் ஸக் க்ரோவ்லி 78 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 556 ஓட்டங்களைக் குவித்தது.
பாகிஸ்தான் சார்பாக அணித் தலைவர் ஷான் மசூத் 151 ஓட்டங்களையும் சல்மான் அகா ஆட்டம் இழக்காமல் 104 ஓட்டங்களையும் அப்துல்லா ஷக்கிப் 102 ஓட்டங்களையும் சவூத் ஷக்கீல் 82 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜெக் லீச்160 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றய்டன் காஸ் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 99 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM