கடிதங்கள் கையில் கிடைக்கவில்லை; சசிகலாவிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை - சத்தியலிங்கம் தெரிவிப்பு

Published By: Vishnu

09 Oct, 2024 | 06:21 PM
image

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09)  கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. 

அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது. அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை. பத்திரிகைகள் ஊடாக்கடிதம் அனுப்ப பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்ப்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம். 

அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது. அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரியவேண்டும்என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது. 

இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது. 

அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது.தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம். அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் தினத்தன்று இலங்கை வரும் நாணய...

2024-11-10 09:32:01
news-image

கைக்குழந்தையுடன் காணப்பட்ட பெண் உள்ளிட்ட வேனிலிருந்தவர்களை...

2024-11-10 09:20:26
news-image

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார்...

2024-11-10 09:46:49
news-image

இன்றைய வானிலை

2024-11-10 07:07:34
news-image

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-09 18:33:44
news-image

முச்சக்கரவண்டி - லொறி மோதி விபத்து...

2024-11-09 18:07:08
news-image

மொனராகலையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட...

2024-11-09 17:49:55
news-image

கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு...

2024-11-09 17:33:52
news-image

புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு!

2024-11-09 16:53:15
news-image

நுவரெலியாவில் மருதபாண்டி ராமேஷ்வரனை ஆதரித்து விசேட...

2024-11-09 17:12:04
news-image

இனத்தின் விடுதலைக்காக திரண்டு வாக்களிக்குமாறும் செல்வம்...

2024-11-09 19:50:55
news-image

சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி...

2024-11-09 16:42:50