மனைவியை கத்தியால் குத்திய கணவர் ; டயகமவில் சம்பவம்

10 Oct, 2024 | 11:17 AM
image

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு  பகுதியில் கனவரொருவர் அவரது மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம்  பதிவாகியுள்ளது.  

காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த  சம்பவம்  புதன்கிழமை (09) காலை  இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

26 வயதுடைய மூன்று  பிள்ளையின் தாயொருவரே 33 வயதுடைய கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,   

செவ்வாய்க்கிழமை (08) மாலை கணவன் - மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது பின்னர் கணவனிடம் மனைவி தொழிலுக்காக கொழும்புக்கு செல்வதாக கூறி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு சென்று அன்றிரவு தங்கி உள்ளார்.  

எனினும் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதிலிருந்து புதன்கிழமை காலை வரை மனைவியிடம் இருந்து கணவனுக்கு தொலைபேசி அழைப்பு வராத காரணத்தால் காலை 8 மணியளவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில் திடீரென அதே பகுதியை சேர்ந்த முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது காதலன் தொழிலுக்குச் சென்ற நிலையில் மனைவி படுக்கை அறையில் இருந்ததை அவதானித்த கணவன்  மனைவியை கத்தியால் வெட்டியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த பெண் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவன் டயகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  அவரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (10) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதித்துறையின் சுயாதீனத்தை சிதைக்க ஜனாதிபதி அநுர...

2026-08-08 16:01:44
news-image

வலப்பனை மல்லியப்பூ தோட்ட அம்மன் ஆலய...

2026-08-08 18:38:24
news-image

சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்:...

2026-08-08 15:22:29
news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17