ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் சுப்பையா ஆனந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த பின்னர் கட்சியை விட்டு பலரும் வெளியேறினர். எனினும், கட்சியின் வளர்ச்சிக்காக கஷ்டமான காலகட்டத்திலும் நாம்தான் களத்தில் இறங்கி செயற்பட்டிருந்தோம்.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் கூட, எவ்வித கொடுப்பனவும் பெறாமல்தான் பணிகளை முன்னெடுத்து வந்தோம். அரச வாகனங்களைக் கூட பயன்படுத்தியது கிடையாது. அரச வளங்களையும் பெற்றது கிடையாது.
எனினும், கட்சியில் உள்ள ஒரு சிலரின் செயற்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அதுமட்டுமல்ல, மக்களால் நிராகரிக்கப்பட்ட, ராஜபக்ஷக்களுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகளுக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் இம்முறையும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, இனியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் பயணத்தை தொடரப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். அந்த வகையில் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் பதவியை துறக்கின்றேன். கட்சியில் இருந்தும் வெளியேறுகின்றேன் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM