இந்தியாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா வேட்டையன் திரைப்படத்தின் மூலம் திரையரங்குகளை அதிரச்செய்யவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் வேட்டையனில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொலிஸ் அதிகாரியாக மீண்டும் ரசிகர்களின் மனதை கவரவுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள வேட்டையன் மூலம் அவர் சிறிய இடைவெளியின் பின்னர் மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்புகின்றார்.
32 வருடங்களின் பின்னர் ரஜினிகாந்தும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் இணைவதே வேட்டையனில் மிகவும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ள விடயம்.இது பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளதுடன் அமிதாப்பச்சன் சத்தியதேவ் என்ற பாத்திரத்தில் தோன்றுகின்றார்.
இந்தியாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணைந்துள்ளமை திரையரங்குகளில் ரசிகர்களிற்கு பெரும விருந்தாக அமையும்.
தமிழ் சினிமாவின் பெயர் பெற்ற இயக்குநரான டிஜே ஞானவேலின் இயக்கத்தில் வேட்டையன் வெளியாகவுள்ளது, ஞானவேல் தனது திரைகதை சொல்லும் பாணிக்காக பெரிதும் பாராட்டப்படுபவர்.
வேட்டையன் நீதி அதிகாரம் ஆகியவற்றின் கதையை ரசிகர்களிற்கு வழங்கவுள்ளது.
ரசிகர்களின் இதயத்தை கொள்ளையிடும் சண்டை காட்சிகள்,பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்த்தக்கூடிய அழுத்தமான கதையையும்
ஜெயிலரில் இணைந்து ரசிகர்களை கிறங்கடித்த பின்னர் வேட்டையனில் ரஜினிகாந்தும் அனிருத்தும் இணையவுள்ளனர்.
இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவையாகியுள்ளன.
ரஜினிகாந்தின் அழகான பிரசன்னமும் அனிருத்தின் அற்புதமான இசையும் இணைந்து தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு அற்புதத்தை வழங்கவுள்ளதாக ரசிகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
வேட்டையன் உண்மையில் தலை சிறந்த நட்சத்திரபட்டாளத்தை கொண்டுள்ளது உண்டையில் இது ஒரு இந்தியா தழுவிய படம்.
ரஜினிகாந் அமிதாப்பச்சானுடன் பஹத் பாசில் மஞ்சுவாரியர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பை வேட்டையன் கொண்டுள்ளது.
வேட்டையன் தமிழ்,இந்தி தெலுங்கு கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ளதுடன் 10ஆம் திகதி நோக்கி நிமிடங்கள் நகர ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதன் நட்சத்திர பட்டாளம்,மிகச்சிறந்த சண்டை காட்சிகள், இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் மீளிணைவு, வேட்டையனை இந்த வருடத்தின் மிகப்பெரும் வெளியீடாக மாற்றியுள்ளன.
காவியப்படைப்புகளை வழங்குவதில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்திற்கு உள்ள பெயரை வேட்டையன் மேலும் வலுப்படுத்துகின்றது.
இலங்கையில் சவோய்சினிமாஸ் ஊடாக அனைத்து திரையரங்குகளிற்கும் வேட்டையனை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டீஸர்கள் மற்றும் டிரெய்லர்கள் மூலம் வேட்டையன் ஏற்கனவே சமூக ஊடகங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளான்.இந்த நிலையில் வெள்ளித்திரையில் அதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
வலுவான செய்தி,மறக்கமுடியாத நடிகர் பட்டாளம்,மிகச்சிறந்த படமாக்கல் ஆகியவற்றின் காரணமாக வேட்டையன் வெள்ளித்திரையையும் ரசிகர்கள் மனதையும் கவரவுள்ளான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM