சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி ஒக்டோபர் பத்தாம் திகதி முதல் அதாவது நாளை முதல் உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் திரைப்படம் 'வேட்டையன்'. இந்த திரைப்படத்தினை முதல் நாள் முதல் காட்சி சென்று பார்ப்பதற்கு சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக ஆர்வலர்களும் ஆர்வமாய் இருக்கிறார்கள். இதற்கான காரணத்தை கீழே காணலாம்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - 70 வயதைக் கடந்திருந்தாலும் இன்றும் கதையின் நாயகனாக நடிப்பதிலும்.. அதிலும் தன்னுடைய பிரத்யேக உடல் மொழி -உரையாடல் - உச்சரிப்பு ஆகியவற்றின் அவருக்கே உரிய வேகத்தை காட்டி நடித்திருப்பது முதன்மையான காரணம்.
அவர் எந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அதில் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலை புகுத்தி, அந்த கதாபாத்திரத்தை ரசிக்க வைப்பார். அதிலும் அவர் காவல்துறை அதிகாரி வேடத்தை ஏற்று நடிக்கும் போது கம்பீரத்துடன் கூடிய தோற்றமும், அந்த கதாபாத்திரத்திற்கே உரிய வேகமும் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைத்துக்கொண்டு நடிப்பார். அதை 'வேட்டையன்' படத்திலும் காணலாம் என்பதால் இதுவும் ஒரு காரணம்.
நடிகர்கள் திரையில் தோன்றினாலும் அவர்களுக்கு இலக்கு ஒன்றை வைத்து அதை நோக்கி பயணிக்க வைப்பது இயக்குநர்கள் தான். அந்த வகையில் இயக்குநர் த. செ. ஞானவேல் ஏற்கனவே 'ஜெய் பீம்' என்ற படத்தின் மூலம் தமிழக ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழக அரசின் கவனத்தையும் திருப்பியவர்.
அவர் இந்தப் படத்தை இயக்கியிருப்பதாலும் இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான ஒரு விடயத்தை மையப்புள்ளியாக உள்ளடக்கமாக கதை கருவாக கொண்டிருக்கிறது என்பது முன்னோட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்தி இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரம் நடித்திருந்தாலும் திறமையான இயக்குநர் இருந்தாலும் படத்தினை தரமாக உருவாக்கும் தயாரிப்பு நிறுவனமும் அவசியம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிரம்மாண்டமான படைப்புகளை மட்டுமே வழங்கி வசூல் ரீதியாகவும், தேசிய விருதுகளையும், உலகளாவிய விருதுகளையும் அள்ளிச்சென்று தனித்துவமான தரமான பட நிறுவனம் என்ற நன்மதிப்பை பெற்றிருக்கும் லைக்கா நிறுவனம் தயாரித்திருப்பதாலும் இப்படத்தை பட மாளிகையில் காண்பதற்கான முதன்மையான காரணமாகும்.
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பான் இந்திய படைப்பாக உருவாகி இருப்பதால் அதாவது தமிழ் திரை உலகிலிருந்து மட்டுமல்லாமல் பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்- டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ரானா டகுபதி - மோலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் பகத் பாசில் - என பலரும் இணைந்திருப்பதால் அவர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தினை கொண்டாடுவார்க
நட்சத்திரங்களுக்கு இணையாக மஞ்சு வாரியர் - ரித்திகா சிங் - துஷாரா விஜயன் - அபிராமி - என முன்னணி மற்றும் பிரபல நடிகைகளும் தங்களது பங்களிப்பினை வழங்கியிருப்பதால் அவர்களது ரசிகர்களும் இப்படத்தினை கொண்டாடுவார்கள்.
நட்சத்திர நடிகர்கள் - நடிகைகள்- இயக்குநர் - படத் தயாரிப்பு நிறுவனம்- ஆகியோர்களை கடந்து திறமை மிகுந்த தொழில்நுட்பக் கலைஞர்களான எஸ். ஆர். கதிர் - அனிருத் ரவிச்சந்தர்- பிலோமின் ராஜ் - ஆகியோரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பனை அளித்திருப்பதால் இப்படத்தினை பட மாளிகையில் கண்டு ரசிப்பதற்கான காரணங்களாகும்.
இது மட்டுமல்லாமல் 'வேட்டையன்' திரைப்படம் முழுவதையும் பார்வைத் திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் படமாளிகை அனுபவமும் பெறும் வகையில் அவர்களுக்கென பிரத்யேக ஒலிக் குறிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் இத்தகைய முயற்சியை முதன் முதலாக மேற்கொண்ட திரைப்படம் என்ற சாதனையையும் வேட்டையன் பெற்றிருக்கிறது.
இதனால் இப்படத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதற்கும் முன் சிபிராஜ் நடிப்பில் வெளியான 'மாயோன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் இத்தகைய பிரத்யேக ஒலி குறிப்புடன் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி ரசிகர்களுக்கு ஒக்டோபர் பத்தாம் திகதி தான் இந்த ஆண்டின் தீபாவளி என்பதால் அவர்கள் நாளை வெளியாகும் 'வேட்டையன்'' திரைப்படத்தை தீபாவளி திருவிழாவாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். குறிப்பாக மேலத்தேய நாடுகளில் உள்ள ரஜினி ரசிகர்கள் வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தங்களின் ரஜினியிஸத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM