(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆறு பிரபல நாடுகளின் கிரிக்கெட் மேதைகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters Legue - IML T20) ரி20 தொழில்முறை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சுற்றுப் போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகள் லீக் அடிப்படையில் பங்குபற்றவுள்ளன.
இதனை முன்னிட்டு மும்பையில் நேற்று அங்குரார்ப்பண வைபவம் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் ஒயன் மோர்கன், ப்றயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஜொன்டி றோட்ஸ், ரொமேஷ் களுவித்தாரன, ஷேன் வொட்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மும்பையில் நவம்பர் 17ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கையும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியாவும் விளையாடவுள்ளன.
இதேவேளை, ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா), ஒய்ன் மோகன் (இங்கிலாந்து), யக் கலிஸ் (தென் ஆபிரிக்கா), ப்றயன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் மற்றைய அணிகளின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றுப் போட்டியில் முதல் நான்கு போட்டிகள் மும்பையிலும் அடுத்த 6 போட்டிகள் லக்னோவிலும் கடைசி 5 போட்டிகளுடன் அரை இறுதிகள், இறுதிப் போட்டி என்பன ராய்பூரிலும் நடைபெறவுள்ளன.
சர்வதேச மாஸ்டர்ஸ் போட்டி அட்டவணை
Schedule of the International Masters League 2024
17th November – India v Sri Lanka – Mumbai
18th November – Australia v South Africa – Mumbai
19th November – Sri Lanka v England – Mumbai
20th November – West Indies v Australia – Mumbai
21st November – India v South Africa – Lucknow
23rd November – South Africa v England – Lucknow
24th November – India v Australia – Lucknow
25th November – West Indies v Sri Lanka – Lucknow
26th November – England v Australia – Lucknow
27th November – West Indies v South Africa – Lucknow
28th November – India v England – Raipur
30th November – Sri Lanka v England – Raipur
1st December – India v West Indies – Raipur
2nd December – Sri Lanka v Australia – Raipur
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM