90 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்காக நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஒக்டோபர் எட்டாம் திகதியன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 29 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்று இடங்களிலும் , ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சி ஒரு இடத்திலும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும், ஏழு இடங்களில் சுயேட்சை உறுப்பினர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களிலும் வென்றிருக்கிறார்கள். இதனால் இந்த கூட்டணி ஆட்சியை அமைக்கிறது. இந்த கூட்டணியின் சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பிராந்தியத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஸ்ரீநகர் பிராந்தியத்தில் இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
மேலும், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஒரு இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெஹபூபா முப்தியின் வாரிசான இல்திஜா முப்தி தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ஜம்மு & காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி -காங்கிரஸ் கட்சி- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொண்ட இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்தக் கூட்டணியின் முக்கிய தலைவரான உமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM