மாணிக்க கங்கையிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கடந்த 7 ஆம் திகதி மாணிக்க கங்கைக்கு நீராடச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில், முதியவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மாணிக்க கங்கைக்கு அருகில் வைத்து முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM