எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் போராட்ட கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் பட்டியல் அடங்கிய வேட்பு மனுவை இன்று புதன்கிழமை (09) மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கையளிக்கப்பட்டது.
அனைத்து மாவட்டத்திலும் உள்ளடங்களாக மக்கள் போராட்ட கூட்டணி குடை சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
அதன்படி நுவரெலியா மாவட்டத்திற்கான சுயேட்சைக் குழு ஒன்றும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உட்பட இரண்டு வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திற்கான பொதுத் தேர்தலுக்காக இதுவரை 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக மாவட்டத் தேர்தலுக்குப் பொறுப்பான அதிகாரி மேலும் குறிப்பிட்டார். இந்த வேட்புமனுக்களை கையளிக்கும் நிகழ்வு மாவட்ட தேர்தல் அதிகாரியும் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருமான திரு.லஹிரு களுகம்பிட்டிய தலைமையில் இடம்பெற்றதுடன், இதற்காக மக்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
அத்துடன் இறுதி தருணத்தில் கட்டுப்பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் இதனால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலப்பகுதியில் சிக்கல் ஏற்படும் எனவும் நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான நந்தன கலபட இதன் போது சுட்டிக்காட்டினார்.
வேட்பு மனு கையளிப்பு காலப்பகுதியில் நுவரெலியா மாவட்ட செயலகம் சுற்றி விசேடப் பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM