உலக தொழிலாளர் தினமான இன்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறைசாற்றும் வகையில் பிரதான அரசியல் கட்சிகளின் மேதின கூட்டங்கள் 16 மே தினக் கூட்டங்கள்  நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்றது.

தமது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டியிலும், ஐக்கிய தேசிக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, பொது எதிரணி கொழும்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்பாறையிலும் பிரதான மே தினக் கூட்டங்களை நடத்துகின்றனர். 

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உலக தொழிலாளர்களின் உரிமைகளை பலப்படுத்தும் வகையில் சகல நாடுகளிலும் பலமான மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அதேபோல் இலங்கையிலும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகளினதும்இ சிவில் அமைப்புகளினதும்இ தொழிற் சங்கங்களினதும் தொழிலாளர் தின பேரணிகளை முன்னெடுக்கவுள்ளனர். 

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் மே தினம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் இம்முறை கண்டியில் கெட்டம்பே மைதானத்தில்  பிற்பகல் 2 மணிக்கு  இடம்பெறவுள்ளது.

சுதந்திர தொழிலாளர் தினம் என அடையாளப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினம் கட்சியின் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.  அதற்கமைய   கண்டி பேராதனை  பண்டாரநாயக்க வீதியூடாக சுதந்திர கட்சியின் மே தினக்கூட்டம் கெடம்பே மைதானத்தை   வந்தடையும். பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேரணி  பிற்பகல் நான்கு மணிக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதான கூட்டத்துடன் நிறைவடையும்.

மேலும் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கண்டிக்கு செல்வதற்கான விசேட பேருந்து போக்குவரத்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்திற்காக  நாட்டில் சகல  பாகங்களில் இருந்தும் 2300 அரச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் நடக்கும் மே தினக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இந்த மே தின கூட்டத்திற்கு  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சகலருக்கும் எழுத்து மூல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் உறுப்பினர்கள் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபப்டும் எனவும் கட்சி மத்தியக்குழு தீர்மானம் எடுத்துள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினம் 

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம்  "வெற்றிபெறும் மக்களின் மே தினம்"  எனும்  தொன்னிப்பொருளில்  இம்முறையும் கொழும்பில் இடம்பெறுகின்றது. கொழும்பில் மருதானையில் இருந்து பிற்பகல் 2மணிக்கு ஆரம்பிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணி புஞ்சி பொரல்லை ஊடக சென்று மருதானை  கெம்பல் மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதான கூட்டமாக  இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின்  அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள்  இணைந்து முன்னெடுக்கும் இந்த பேரணியில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளனர்.  மேலும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் இம்முறை  மூன்று  இலட்சம் ஆதரவாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்படவுள்ள நிலையில் அவர்களுக்கான 3000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் 

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் வழமைக்கு மாறாக இரண்டு பகுதிகளில் அரசியல் தலைமைகளை பிரதானப்படுத்திய வகையில் அமையவுள்ளது. மே தினக் கூட்டத்தை  அடையாளபடுத்திய வகையில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணியின்  மக்கள் பேரணி முதல் தடவையாக யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்றது.  

இந்த பேரணியில் கட்சியின் தலவர் அனுரகுமார திசாநாயக, உறுப்பினர்களான லால் காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹன்துன்நெத்தி உள்ளிட்ட அரசியல் குழு உறுப்பினர்களும் தொழிற்சங்க அமைப்புகளும் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பு உறுப்பினர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.  அதேபோல்  இன்று மக்கள் விடுதலை முன்னணியின் மே தின கூட்டம்  தெஹிவளை  எஸ். டி.எஸ் ஜெயசிங்க மைதானத்தில் இருந்து ஆரம்பிக்கும். பிரதான மே தினக் கூட்டம் கிருலப்பனை பி. ஆர்.சி மைதானத்தில் நிறைவடையவுள்ளது.  இந்த மே தினக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள், இளைஞர் முன்னணி, சிவில் அமைப்புகள், மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச பிரதிநிதகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

பொது எதிரணியின் மே தினக் கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் மிகவும் பலமானதும் அரசாங்கத்தை மீண்டும் அமைக்கும் மே தினமாக மாற்றவுள்ளதாக சவால் விடுத்தது  இன்று பொது எதிரணியின் மே தினக் கூட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன, லங்கா சமசமாஜ கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, மக்கள் இகிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளும்  சோஷலிச இலங்கை தொழிலாளர் சங்கம், வணிகத்தொழிலாளர் மற்றும் முற்போக்கு சேவை சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து  கொழும்பில் பல்வேறு இடங்களில் இருந்து ஆரம்பிக்கும் பொது எதிரணியின் மே தினக் கூட்டம் காலிமுகத்திடல் மைதானத்தில் பிரதான கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.  அதேபோல் இம்முறை மே தினக் கூட்டத்தில் 20 இலட்சம் மக்களை இணைத்து தமது பலத்தை வெளிப்படுத்தவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர். 

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை  வடக்கிலும் கிழக்கிலும் மே தின நிகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். மேதினம் வடமாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்திலும்இ கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலும் நடாத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் தலைமையில் அரசியல் உறுப்பினர்கள் அனைவரம் இந்த மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பினர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். 

தமிழர் முற்போக்கு கூட்டணி மே தினம் 

அமைச்சர்களான  மனோ கணேசன்இ திகாம்பரம் இ ராதாகிருஸ்ணன் ஆகியோரின் தலைமையில் தமிழர் முற்போக்கு கூட்டணியின் மே தினக் கூட்டம் மலையக தமிழரின் ஒன்றுபட்ட சக்தி என்ற தொனிப்பொருளில் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மலையக தொழிற்சங்க பிரதிநிதகள் மற்றும் அரசியல் உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் வகையில் இந்த மே தினக்கூட்டம்  அமையவுள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினம்

 மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டமாக மாற்றப்படும் மே தினம் என தெரிவித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தமது மே தினக் கூட்டத்தை இம்முறை  கினிகெத்தேன நகரில் நடத்துகின்றது.  கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த மே  தினத்தை நடத்தவுள்ளனர். 

சோஷலிச கட்சிகளின் மே தினம் 

ஐக்கிய சோஷலிச கட்சிஇ ஸ்ரீலங்கா கொமியுநிஸ்ட் கட்சிஇ சோஷலிச சமத்துவ கட்சிஇ நவ சமசமாஜ கட்சிஇ முன்னிலை சோஷலிசக் கட்சிஇ சோஷலிசக் கட்சிஇ கொழும்பிலும் கொழும்புக்கு வெளியிலும் சோஷலிச கட்சிகளின் மற்றும் கிராம சேவகர் சங்கம்இகிஸ்ருஸ்துவ தொழிலாளர் சகோதரத்துவ அமைப்புஇ இலங்கை வங்கி சேவையாளர் அமைப்புஇ விவசாயிகள் அமைப்புஇ சுதந்திர வர்த்தக பொது சேவைகள் அமைப்புஇ ஐக்கிய விவசாயிகள் சம்மேளனம் ஆகிய அமைப்பிகளின்  மே தினக் கூட்டங்களும் கொழும்பில் தனித்தனியே  இடம்பெறவுள்ளது. மருதானைஇ கிருலப்பனைஇ புறக்கோட்டைஇ கோட்டைஇ வாழைத்தோட்டம் ஆர் பிரேமதாச சிலைக்கு முன்னாள்இ கொள்ளுப்பிட்டிஇ ஒஉதிய நகர மண்டபம்இ  பலாமரச் சந்திஇ விகாரமாகதேவி பிரதேசம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. 

ஜாதிக ஹெல உறுமைய தனித்து மே தினம் 

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சியாக இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமைய இம்முறை மே தினத்தை தனியாக முன்னெடுக்கவுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக இவர்களின் மே தினக் கூட்டம் காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவர்கள் புறக்கோட்டை பகுதியில் தொழில் புரியும் தொழிலாளர்களுடன் இணைந்து தமது  மே  தினக் கூட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். 

அதேபோல் இன்றைய தினம்  கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டங்களின் காரணமாக பாதுகாப்பான வாகன போக்குவரத்து பாதைகளை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பஸ் போக்குவரத்துக்கான மாற்றுபாதைகள்

வீதி இலக்கம் 138 கொழும்பு புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டு மஹரகமை வரைச் செல்லும்  பஸ் சேவை கொம்பெனித்தெருஇ ஜேம்ஸ் பீரிஸ் வீதிஇ பித்தளைச் சந்திஇ செஞ்சிலுவை சந்திஇ நூலகச் சந்திஇ நந்தா மோடர்ஸ் சுற்றுஇ சுதந்திர சதுக்க சுற்றுவட்டாரம் வழியேச் சென்று ஹயிலெவல் வீதியூடாக பயணிக்கும்.

வீதி இலக்கம் 138 மஹரகமையிலிருந்து கொழும்பு நோக்கிவரும் பஸ்கள் இப்பன்வல சந்தியில் இடதுபக்கமாக திரும்பி டீ.பீ. ஜாயா வீதிஇ காமினி சுற்றுவட்டாரம்இ டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையிலுள்ள செரமிக்கு சுற்றுவட்டாரத்தை கடந்து கொழும்பு புறக்கோட்டைக்கு வந்தடையும்.

வீதி இலக்கம் 154 கிரிபத்கொடை அங்குளான வரையில் பயணிக்கும் பஸ்கள் களனி பாலம்இ பண்டாரநாயக்க மாவத்தைஇ ஹொருகொடவத்தைச் சந்திஇ வெள்ளம்பிடியஇ கொலன்னாவை வீதிஇ ஒபேசேகரபுற ஆயூர்வேதச் சந்திஇ டீ.எஸ்.சந்தியை சென்றடையும்.

வீதி இலக்கம் 176 ஊடாக ஹெட்டியாவத்தையிலிருந்து நுகேகொடை நோக்கி பயணிக்கும் பஸ்கள் ஆவர் வீதிஇ புறக்கோட்டைஇ டீ.ஆர். விஜேவர்தன வீதிஇ இப்பன்வல சந்திஇ கண் வைத்தியசாலை வீதிஇ வோட் பிளேஸ்இ பொரள்ளைச் சந்தி ஆகிய இடங்களை சந்தியூடாகச் செல்லும்.

கொழும்பு கோட்டையிலிருந்து பொரள்ளை வரையில் பயணிக்கும் 103 ஆம் இலக்க பஸ்கள் கொழும்பு கோட்டைஇ டீ.ஆர.விஜேவர்தன மாவத்தைஇ காமினி சுற்றுவட்டாரம்இ டார்ளி வீதிஇ தீயனைப்பு படைத் தலைமையகம்இ சுதுவெள்ளைச் சந்திஇ ஆனந்த கல்லூரிச் சந்திஇ புஞ்சி பெரள்ளைச் சந்தி பொரள்ளை வரையில் மரதானை வீதியின் இடது பக்க ஒழுங்கிள் பயணிக்கும்.

கண்டி வீதியூடாக கொழும்பிற்கு உள்நுழையும் பஸ்கள் பண்டாரநாயக்க சுற்றுவட்டாரம்இ இங்குகடே வீதிஇ சிரிமாவோ பண்டாரநாயக்க வடரவுமஇ ஆமர் வீதி மின்கட்டமைபு நிலையச் சந்திஇ ஆமர் வீதியின் மத்திய பகுதிஇ வழியாக புறக்கோட்டை நோக்கிச் செல்லும். காலி வீதியூடாக தெஹிவலை வரையிலும் ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியூடாக வெளிக்கைடையிலிருந்து பொரள்ளை வரையிலும் சாதாரண வாகனங்கள் போக்குரத்தில் ஈடுபட முடியும்.

அதேநேரம் கொழும்பு சங்கராஜ மாவத்தைஇ மாளிகாவத்தைஇ ஜயந்த வீரசேகர வீதிஇ பஞ்சிகாவத்தை வீதிஇ மருதானை வீதிஇ ஆனந்த ராஜகருணா வீதிஇ பூங்கா வீதிஇ ஆமர்  வீதிஇ பேஸ்லைன் வீதிஇ காலி முகத்திடல் வீதிஇ மாகின் மாகர் வீதிஇ ஜஸ்டஸ் அக்பர் மாவத்தைஇ யூனியன் பிளேஸ்இ காமினி சுற்று வட்டாரம் தொடக்கம் மருதானை பாலம் வரையிலான இடங்களில்  நேற்று இரவு வேலை முதலே வாகனங்கள் தரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மாளிகாவத்தை வீதியின் பிரதீபா மாவத்தைஇ ஜும்மா மஸ்ஜித் வீதிஇ சங்கராஜ வீதி சுற்றுவட்டாரமும்இ பேஸ்லைன் வீதியின்இ தெமடகொடை சந்தியிலிருந்து பொரளை வரையிலும்இ சரணங்கர வீதியின் பாமங்கடை சந்தியிலிருந்து டீ.எஸ்.டி ஜயசிங்க விளையாட்டரங்கம் வரையிலும்இ கொம்பெனித்தெரு தொடக்கம் இப்பன்வல சந்தி வரையிலும் வாகன போக்குவரத்துச்  தடைச் செய்யப்படும். . மருதானை 11 மணி தொடக்கம் 5 மணிவரைல் மருதானை பொரள்ளை சந்திஇ சங்கராஜ மாவத்தைஇ பஞ்சிகாவத்தை வீதியிலும் 9  மணி தொடக்கம் 5 மணி வரையிலும் ஆமர் வீதியின்  சொன்டர்ஸ் வீதி சுமனதிஸ்ஸ மாவத்தை ஆகிய இடங்களிலும்இ 6 மணி தொடக்கம் 10 மணி வரையிலும் மிஹிந்து மாவத்தைஇ குணசிங்கபுர சந்திஇ வெள்ளம்பிட்டி சந்திஇ வெல்ல நீதிமன்ற வீதி சந்திஇ பஞ்சிகாவத்தை சந்தி ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுபடுத்தப்படவுள்ளது.

தொழிலாளர் தின பேரணிகள்  இடம்பெறுகின்ற போது கொம்பெனித்தெரு சந்தி ஜேம்ஸ் பீரிஸ் வீதி பக்த்திற்கு 9 மணியிலிருந்து 5 மணி வரையிலும் காலி முகத்திடல் சுற்றுவட்டாரத்தில் கொள்ளுபிட்டி வரையில் 1 மணி தொடக்கம் 6 மணிவரையிலும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் இச்சமயத்தில் பன்படுத்த வேண்டி மாற்று  பாதைகளையும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய பேஸ்லைன் வீதியூடாக பேலியகொடையிலிருந்து தெமட்டகொடை  வரையில் பயணிக்கும் வாகனங்கள் ஒருகொடவத்தைஇ வெள்ளம்பிடிய கொலன்னாவஇ ஒபேசேகர புரஇ பழைய ராஜகிரிய வீதி பொரளை வரையில் பயணிக்க முடியும். கொழும்பு கோட்டையிலிருந்து கொள்ளுபிட்டி பகுதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நீர்கொழும்பு வீதிஇ கண்டி வீதிஇ உள்ளிட் பகுதிகளையும் நவலோக சுற்றுவட்டாரம்இ இங்குருகட வீதிஇ ஆமர் வீதிஇ வித்யால மாவத்தைஇ ஐந்துலாம்புச் சந்திஇ பிரதான வீதிஇ கோட்டை ஆகிய பகுதிகள் ஊடாக சென்றடைய முடியும்.

கண்டியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்தினை முன்னிட்டு  காலை 6 மணி தொடக்கம் கண்டி கெடம்பே வீதி முழுமையாக மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது..சுதந்திர கட்சியின் மே தின கூட்டத்திற்கு வருகின்ற வாகனங்களை தரிக்கும் இடங்களாக பேராதனை வில்லியம் கொபல்லாவை வீதியின் ஒரு கட்டமும் பேராதனை பழைய வாகன எறிபொருள் நிரப்பு நிலையம் அமைந்திருந்த வீதியும் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்படவுள்ளது.  கொழும்பிலிருந்து கண்டிநோக்கி வரும் வாகனங்கள் வில்லியம் கொபல்லாவை வீதிக்கு கன்னொருவை பகுதியில் வைத்து உட்புகுந்து கண்டியை வந்தடையலாம். கொழும்பை நோக்கி வரும் வாகனங்கள் கண்டி வில்லியம் கொபல்லாவை வீதியில் வலது பக்கத்தின் ஊடாக பயணித்து பெராதனைச் சந்தியை வந்தடைய முடியும். அதேநேரம் கொழும்பிலிருந்து வரும் பார ஊர்திகள் அம்பேபுஸ்ஸையில் வைத்து குருணாகல் சென்று அங்கிருந்து கண்டியை வந்தடைய முடியும். 

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கன்னோருவ  எறிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாகவுள்ள கம்பளை கடுகன்னாவை வீதியூடாக பயணிக்க முடியும். அத்துடன் கேகாலை கரடுபன சந்திஇ ரம்புக்கனைஇ ஹதரலியத்த ஊடாகவும் குருநாகல் வீதிக்கு உள்நுழைய முடியும். கொழும்பிலிருந்து நுவரெலியாஇகம்பளைஇ ஹட்டன் இ நாவலப்பிட்டி  நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹிங்குல சந்தியிலிருந்து இடது பக்கமாக திரும்பி மஹன்தேகம வீதியூடாக பயணிக்கலாம். மேலும் கண்டியில் மே தின கூட்டத்தின் போதான பாதுகாப்பு பணிகளுக்கான அதிகளவிலான பாதுகாப்பு வாகனங்களும் 3500 க்கும் மேற்பட்ட பொலிஸ் திணைக்கள சேவையாளர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.