முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன் நேரில் சந்திப்பு

Published By: Vishnu

08 Oct, 2024 | 09:08 PM
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செவ்வாய்க்கிழமை (08) நேரில் சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 வருடங்களின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால்  திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அவரை இலங்கைக்கு மீள அழைத்து வர அப்போது கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போதே கடந்த  பெப்ரவரி மாதம்  நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மசாஜ் செய்வதாகக் கூறி வைத்தியரிடம் கொள்ளை...

2024-11-12 13:30:38
news-image

பியூமி ஹன்சமாலி, விரஞ்சித் தம்புகலவின் விசாரணைகளைத்...

2024-11-12 13:26:34
news-image

அக்கரப்பத்தனையில் வீடுடைத்து திருட்டு ; சந்தேக...

2024-11-12 12:20:13
news-image

கொழும்பு - அவிசாவளை வீதியில் பஸ்...

2024-11-12 12:06:39
news-image

காணாமல்போயிருந்த மூதாட்டி வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு!

2024-11-12 11:54:43
news-image

கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

2024-11-12 11:37:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-11-12 12:03:44
news-image

வடக்கு கடலில் வைத்து 12 இந்திய...

2024-11-12 11:28:13
news-image

தேர்தலை நடத்த கடுமையான முறையில் சட்டம்...

2024-11-12 11:26:36
news-image

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையத்தளம் மீது சைபர்...

2024-11-12 11:16:20
news-image

பலாங்கொடையில் வயலிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2024-11-12 11:03:03
news-image

அறுகம்குடா பயணஎச்சரிக்கையை அமெரிக்க நீக்கவேண்டும் -...

2024-11-12 10:49:23