எம்மில் பலருக்கும் பண தேவை என்பது அதிகமாகவே இருக்கும். அதே தருணத்தில் பணத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கும். யாரும் நாளாந்தம் 5,000 ரூபா கிடைத்தால் போதும் என எண்ணுவதில்லை.
5 இலட்சம் 5 மில்லியன் 5 கோடி என திடீர் தன வரவு வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். சிலர் லொத்தர் மூலம் திடீர் பண வரவு வரவேண்டும் என விரும்புகிறார்கள்.
ஆனால் இத்தகைய அதிர்ஷ்டம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. தன வரவு இயல்பை விட கூடுதலாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள் ராகு பகவானை வழிபடத் தொடங்கினால் அவர் மட்டுமே திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்.
இது தொடர்பாக எம்முடைய முன் ஆன்மீக முன்னோர்கள் ராகு பகவானை எந்த பாணியில் வழங்கினால் அவர் மனம் குளிர்ந்து அருள் பாலிப்பார் என்பதனையும் குறிப்பால் உணர்த்தி இருக்கிறார்கள்.
ராகு பகவான் என்றாலே உளுந்து என்பதும் உடன் நினைவுக்கு வர வேண்டும். மார்கழி மாதத்தில் சனிக்கிழமைகளில் ராகு காலமான காலை ஒன்பது மணி முதல் 10:30 மணி வரை விரதம் இருந்து ராகுவின் அம்சம் என கருதப்படும் துர்கா தேவி , காளி ஆகியோரை முல்லை மலர் , செவ்வரளி மலர் சாற்றி, உளுந்தால் தயாரித்த நிவேதனத்தை படைத்து மனமுருக வணங்க வேண்டும்.
இந்த தருணத்தில் 'ஓம் மகா காளி தும்துர்க்கே நாக வஸிய ஸ்ரீ ராகுவே நமோநம ' எனும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தை ராகு கால தருணமான ஒன்றரை மணி தியாலமும் உச்சரிக்கலாம்.
மார்கழி மாதம் கடந்து சென்று விட்டது. தற்போது ராகு பகவானை வணங்கினால் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்காதா? என எம்மில் பலரும் கேட்பர்.
பொதுவாக சனிக்கிழமைகளில் ராகு கால வேளையான ஒன்பது மணி முதல் 10:30 மணி வரை அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று உக்கிர தெய்வங்கள் என்று போற்றப்படும் துர்கா தேவி அல்லது காளியை அவர்களுக்குரிய மலர்களை சாற்றி, உளுந்து தானியத்தால் நிவேதனங்களை படைத்து, மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மந்திரத்தை உச்சரித்து வணங்க வேண்டும். இதனை தொடர்ந்து 48 சனிக்கிழமைகள் வரை வழிபட்டால் அதிர்ஷ்ட தன வரவு வருவது உறுதி.
அதை தருணத்தில் தொழு நோயாளிகள், வெண் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் அங்கஹீனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் குறிப்பாக கைகளில் கோலுன்றி நடப்பவர்கள் ஆகியோர்களுக்கு உளுந்து வடை ,உளுந்து பாயாசம், உளுந்து உருண்டை என உளுந்து தானியத்தால் செய்த தின்பண்டங்களை தானமாக வழங்கி, அவர்களின் வயிறாற ஆசியினைப் பெற்றாலும் திடீர் அதிர்ஷ்டம் வரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM