டிரிக்கர் ஃபிங்கர் எனும் கை விரலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 2

08 Oct, 2024 | 05:11 PM
image

எம்மில் பலருக்கு நாற்பது வயதை கடந்த பிறகு வலது கை அல்லது இடது கையை மூடி திறக்கும் போது அதில் ஒரு விரல் குறிப்பாக நடுவிரல் அல்லது மோதிர விரல் முழுமையாகவும், உடனடியாகவும் விரிவதில்லை. 

சற்று கால தாமதத்திற்கு பிறகு தான் அல்லது சிறிய அளவிலான முயற்சிக்குப் பிறகுதான் அந்த விரல்கள் இயல்பான நிலையை அடையும். 

இத்தகைய பாதிப்பிற்கு மருத்துவ மொழியில் ட்ரிக்கர் ஃபிங்கர் என குறிப்பிடுகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

நாற்பது வயதை கடந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள் , தைரொய்ட் சுரப்பியில் சமச்சீரற்ற நிலையில் இருப்பவர்கள், கொலஸ்ட்ரால் பாதிப்புள்ளவர்கள் ஆகியோருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம். 

எம்முடைய கைகளில் உள்ள ஒவ்வொரு விரலுக்கும் பிரத்யேக நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் சீராக இயங்குவதற்கு அதனுள் ஒரு பாதை உள்ளது. 

இந்தப் பாதையில் அடைப்பு ஏற்படும்போது அவை விரல்களின் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

இதற்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தைரொய்ட் சுரப்பியை சமச்சீரான நிலையில் வைத்திருப்பது கொலஸ்ட்ராலின் அளவை சமமாக பாவிப்பது போன்ற நடைமுறையை சீராக பேணினால் இத்தகைய பாதிப்பினை கட்டுப்படுத்தலாம்.

இத்தகைய பாதிப்பு மோதிர விரல் அல்லது நடு விரலில் ஏற்பட்டு, அதனால் வலி தீவிரமாக இருந்தால் உடனடியாக வைத்திய நிபுணர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். 

வைத்திய நிபுணர்கள் சில பரிசோதனைகளுக்கு பிறகு மோதிர விரல் மற்றும் நடு விரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் பகுதியில் பிரத்யேகமான ஊசி மூலம் மருந்தியல் சிகிச்சையை அளித்து, பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். 

சிலருக்கு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சை மற்றும் இயன் முறை சிகிச்சை மூலமும் முழுமையான நிவாரணத்தை வழங்கலாம்.

வைத்தியர் ஸ்ரீராம்
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-11-09 19:49:30
news-image

இரத்த நாளங்களில் ஏற்படும் அனியூரிஸம் பாதிப்பிற்குரிய...

2024-11-08 15:42:09
news-image

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2024-11-06 17:34:15
news-image

முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை...

2024-11-05 19:33:05
news-image

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான...

2024-11-04 17:07:17
news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49
news-image

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்...

2024-10-25 05:59:15