உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணைகள் ஆரம்பம் ; வரலாற்று தவறுகள் இனி இடம்பெறாது - அரசாங்கம் உறுதி!

08 Oct, 2024 | 05:09 PM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரலாற்று தவறுகள் இனி இடம்பெறாது. தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை காணாமலாக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். 

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற போது இதனைத் தெவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பக்கங்கள் எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. முன்னாள் சட்ட ஆய்வாளரின் தலையீட்டுடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு எவ்வித அநீதியும் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணகளின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்பட்டனவா? என்பதை வெளிக் கொண்டு வருவோம். இரண்டாவதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை யாரிமுள்ளது என்பது தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது.  

தற்போதைய அரசாங்கத்தின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வாய்ப்பில்லை. அரசாங்கம் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதி மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். எனினும் பதவியேற்று குறுகிய காலத்துக்குள் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம்.  

வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் புதிய ஆட்சியின் கீழ் ஒருபோதும் இடம்பெறாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி, தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த அரசாங்கங்களைப் போன்று அவற்றை காணாமலாக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குகின்றோம்.  

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக குமார நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் மாற்றம் ஏற்பட்டாலும், விசாரணைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் அவ்வாறே இருக்க வேண்டும். ஓய்வு பெற்றுச் செல்லும் போது அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. எனவே விசாரணைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் காணாமல் போயிருந்தாலும், அதற்கு பதிலளிப்பதற்கு அவர் பொறுப்புடையவராவார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37
news-image

மட்டக்குளியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது !

2025-02-10 18:59:30
news-image

டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு...

2025-02-10 19:30:08