அர்ஜுன் - ஜீவா இணையும் 'அகத்தியா'

Published By: Digital Desk 2

08 Oct, 2024 | 09:03 PM
image

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகர்களான 'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஜீவா கதையின் நாயகர்களாக அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'அகத்தியா ' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.

பாடலாசிரியரும், நடிகரும், இயக்குநருமான பா. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ' அகத்தியா ' எனும் திரைப்படத்தில் அர்ஜுன், ஜீவா, ராசி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் ஹொலிவுட் நடிகர் எட்வர்ட் சோனன்பிளிக் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

தேவதைகளுக்கும், பிசாசுகளுக்கும் இடையேயான போட்டியை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டொக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் வைட் ஆங்கிள் மீடியா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனீஷ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்திற்கான முதல் பார்வையில் அர்ஜுன், ஜீவா, ராசி கண்ணா ஆகியோருடன் ஹொலிவுட் நடிகர் நடிகரும் தோன்றுவதால் இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப்...

2025-02-11 17:30:29
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின்...

2025-02-11 17:20:45
news-image

நடிகர் லியோ. சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2025-02-11 17:19:29
news-image

நடிகர் சூரி வெளியிட்ட நடிகர் அஜய்...

2025-02-11 16:47:24
news-image

இயக்குநர் நெல்சன் வெளியிட்ட நடிகர் தர்ஷனின்...

2025-02-11 16:37:24
news-image

நடிகர்கள் கோபி - சுதாகர் இணையும்...

2025-02-11 16:37:08
news-image

கண்ணை மூடிக்கொண்டு 'கிஸ்' ( KISS)...

2025-02-11 16:36:45
news-image

அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய...

2025-02-10 15:28:51
news-image

துஷ்யந்த் ஜெயபிரகாஷ் நடிக்கும் 'வருணன்' படத்தின்...

2025-02-10 16:31:40
news-image

தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல்...

2025-02-10 16:30:48