ஹாட்ரிக் வெற்றியை வழங்க வேண்டும் என்ற உந்துதலில் இருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பிளடி பெக்கர்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சிவ பாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' எனும் திரைப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, டி. எம். கார்த்திக், பதம் வேணு குமார், ஹர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ். சலீமா, அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஃபிளமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல நட்சத்திர இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 'பிளடி பெக்கர்' திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதையின் நாயகனான கவின் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் மாற்றுத்திறனாளி வேடமிட்டு பிச்சை எடுக்கும் காட்சிகளும், அதனை தொடர்ந்து அவர் தன்னுடைய போலியான வேடத்தை கலைந்து இறுதிச்சடங்கு ஊர்வலம் ஒன்றில் நடனமாடுவது போலும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் 'பிளடி பெக்கர்' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM