(எம்.ஆர்.எம்.வஸீம்)

மேதினத்தையொட்டி நாளை இடம்பெறவுள்ள அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் ஆதரவாளர்களை அழைத்துவரும் பொருட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான நான்காயிரம் பஸ்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆயிரத்து 537 பஸ்களையும் ஐக்கிய தேசிய கட்சி ஆயிரத்து 432 பஸ்களையும் மக்கள் விடுதலை முன்னணி 209 பஸ்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி 22 பஸ்களையும் முன்பதிவு செய்துள்ளது.

அத்துடன் முன்பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பஸ் வண்டிகளுக்கும் கட்டணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன். மேதினத்துக்காக பஸ் வண்டிகள் வழங்யுள்ளதன் மூலம் போக்குவரத்து சபைக்கு 35 மில்லியன் தொடக்கம் 40 மில்லியன் வரை வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் பிரதான செயற்பாட்டதிகாரி சீ.எச்.ஆர்.ரி. சந்திரசிறி தெரிவித்தார்

அத்துடன் மேதின கூட்டங்களுக்காக சுமார் 7ஆயிரம் வரை தனியார் துறைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் அரசியல் கட்சிகளினால் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.