தமிழ் திரையுலகின் பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டாரான நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சூர்யா 44' என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உருவாகி வரும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம் குமார், ராம்ஸ், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்ரேயா சரண் ஒரு பாடலுக்கு பிரத்யேகமாக நடனமாடியிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கேங்ஸ்டர் பின்னணியிலான எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தை பற்றிய சிறப்பு காணொளியை படக்குழுவினர் வெளியிட்டனர்.
மேலும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் ' கங்குவா ' எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் உள்ளிட்ட ஏராளமான இந்திய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM