நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!

07 Oct, 2024 | 05:18 PM
image

யாழ். மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இன்று திங்கட்கிழமை (07)  தாக்கல் செய்யப்பட்டது.       

இதன்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார்.  

இதேவேளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா,  

வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.   

இதன்போது ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா?  என்ற  கேள்விக்கு   

கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது ஈ.பி.டி.பி.  

இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர்.  

அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலீடு, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதை பிரதிநிதித்துவப்படுத்தும்...

2024-12-13 02:13:40
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-13 01:02:13
news-image

'கோட்டாபய - பகுதி 2'ஆக மாறிவிட்டாரா...

2024-12-12 17:28:10
news-image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள...

2024-12-12 21:13:18
news-image

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்ய...

2024-12-12 17:20:39
news-image

சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி...

2024-12-12 21:12:41
news-image

சபாநாயகரின் “கலாநிதி” பட்டம் தொடர்பான சர்ச்சை...

2024-12-12 17:06:16
news-image

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டு...

2024-12-12 21:15:23
news-image

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை :...

2024-12-12 17:04:17
news-image

உதயங்க, கபிலவுக்கு எதிராக புதிய அரசாங்கம்...

2024-12-12 19:27:14
news-image

மக்களுக்கிடையிலான இராஜதந்திரத்தின் உதாரணமாக அமைதிப்படை நிகழ்ச்சித்திட்டம்...

2024-12-12 19:23:22
news-image

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு...

2024-12-12 18:11:27