இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய முறை..!!?

Published By: Digital Desk 2

07 Oct, 2024 | 03:06 PM
image

எம்முடைய இல்லங்களில் தன வரவு இயல்பாக இருந்தாலோ அல்லது நாளாந்தம் படிப்படியாக அதிகரித்தாலோ எம்முடைய மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

எம்முடைய குடும்ப உறுப்பினர்களின் மனமும் குதூகலிக்கும்.  ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாவதில்லை. சிலருக்கே இது சாத்தியமாகிறது. 

அதன் பின்னணி என்ன? என்பது குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு நுட்பமான விடயத்தை குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

சகல ஐஸ்வர்யங்களும் ஒருவருடைய இல்லங்களில் தங்க வேண்டும் என்றால் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மகாலட்சுமி அம்சம் கொண்ட தாமரை மலரையும், தாமரை மணி மாலையையும் முன்னிலைப்படுத்த வேண்டும். 

அதாவது அவர்கள் எப்போதும் தாமரை மணி மாலையை பாவித்தால் செல்வமும், செல்வ வளமும் குறையாது.

தாமரை மணி மாலை...!!

எம்மில் பலரும் தற்போது கருங்காலி மாலையை அணிய தொடங்கி இருக்கிறார்கள் அல்லது அது குறித்த சுப பலனை அறிந்து வைத்திருக்கிறார்கள். வாய்ப்பும், பாக்கியமும் பெற்றவர்கள் கருங்காலி மாலையை அணிந்து தங்களது மன அமைதியையும், அக மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள். 

அதே தருணத்தில் அவர்கள் செல்வ வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றால் தாமரை மணி மாலையை பாவிக்கத் தொடங்குகிறார்கள்.

சந்தையில் கிடைக்கும் தாமரை மணி மாலையில் அசலானது எது? என்பதை கண்டறிந்து அதை அணிந்தாலோ அல்லது அதனை நாளாந்தம் காலையில் எழுந்ததும் நீராடி பூஜை அறையில் மகாலட்சுமி புகைப்படத்திற்கு எதிரே அமர்ந்து, தாமரை தண்டால் நெய் தீபம் ஏற்றி, வலது கையில் தாமரை மணி மாலையை வைத்துக் கொண்டு உங்களுக்குப் பிடித்த மகாலட்சுமி மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து 48 நாட்கள் வரை உச்சரித்தாலோ அல்லது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் காலை சுக்கிர ஓரை தருணத்தில் 108 முறை மகாலட்சுமி மந்திரத்தை தாமரை மணிமாலை கொண்டு உச்சரித்தாலும் செல்வ வளம் உயர்வதை காணலாம். 

இதனைத் தொடர்ந்து பத்து வெள்ளிக்கிழமைகள் வரை தாமரை மணி மாலையுடன் கூடிய இந்த மகாலட்சுமி மந்திர உச்சாடன வழிபாட்டை கடைப்பிடித்தால் உங்களது செல்வ நிலை உயர்வதை அனுபவத்தில் காணலாம்.

இன்னும் சிலர் தாமரை மணி மாலையை எப்போதும் தங்கள் உடன் வைத்துக் கொண்டிருப்பர். எந்த தருணங்களில் எல்லாம் அதாவது முக்கியமான பிரமுகர் உடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைய வேண்டும் என விரும்பும் போதெல்லாம் இந்த தாமரை மணி மாலையுடன் கூடிய மகாலட்சுமி மந்திர உச்சாடனத்தை மேற்கொள்வர். 

இதற்கான பலனை அவர்கள் உடனே அடைவதையும் அனுபவத்தில் காணலாம்.

இந்த தாமரை மணி மாலையை வைத்துக் கொண்டிருப்பவர்கள் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் தாமரை மலர்களை மகாலட்சுமிக்கு சமர்ப்பித்து அவர்களை வணங்க வேண்டும். அங்குள்ள நீர் நிலைகளில் தாமரை விதைகளை தூவி விட்டு வரலாம். 

இது போன்ற சுப பலன்களை அள்ளித் தரும் செயல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது உங்களுடைய செல்வ வளம் தங்கு தடையின்றி வருவதுடன் உயர்வதையும் அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடனை தீர்ப்பதற்கான எளிய வழிமுறை..!

2024-11-12 13:24:52
news-image

ராகு கால மற்றும் எமகண்ட தருண...

2024-11-11 14:23:23
news-image

முற்பிறவி கர்மாவை அகற்றும் நாம யோகமும்,...

2024-11-09 19:48:56
news-image

நாட்பட்ட நோய் குணமடைவதற்கான எளிய வழிப்பாட்டு...

2024-11-08 16:03:29
news-image

தன வரவு தங்கவும் அதிகரிக்கவும் செய்ய...

2024-11-06 17:34:34
news-image

ஆச்சரியம் அளிக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்கள்..!

2024-11-05 19:33:23
news-image

2024 நவம்பர் மாத ராசி பலன்கள் 

2024-11-04 19:05:00
news-image

புத்திர பாக்கியத்தில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கான...

2024-11-04 14:23:14
news-image

காணி தொடர்பான சிக்கல்களை களைவதற்கான எளிய...

2024-11-02 16:39:01
news-image

நினைத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும்...

2024-10-30 15:58:45
news-image

கிருஷ்ணனின் அருளை பெறுவதற்கான கோவர்த்தன பூஜை..!

2024-10-29 16:49:13
news-image

காதலில் வெற்றி பெற்று திருமணத்தை நடத்துவதற்கான...

2024-10-28 17:20:35