ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர் சுற்றுப் போட்டி: இலங்கை ஆடவர் அணி மூன்றாம் இடம்

07 Oct, 2024 | 01:52 PM
image

(நெவில் அன்தனி)  

நெபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அமைந்துள்ள தஷரத் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர் றக்பி சுற்றுப் போட்டியில் தரிந்த ரத்தவத்த தலைமையிலான இலங்கை அணி மூன்றாம் இடத்தைப் பெற்றது.  

உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் 32 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தல்  இலகுவாக வெற்றிபெற்று இலங்கை 3ஆம் இடத்தைப் பெற்றது.  

மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஷாஹித் ஸும்ரி, ஜனிந்து டில்ஷான், ஹேஷான் ஜென்சன்,  தரிந்த  ரத்வத்த ஆகியோர் ட்ரைகளை வைத்து இலங்கையை வெற்றி அடையச் செய்தனர்.  

இந்த சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெற்ற இலங்கை, லீக் சுற்றில் கஸக்ஸ்தான் (43 - 0), கத்தார் (39 - 5), சவீதி அரேபியா (52 - 0) ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு பிரதான கிண்ணத்துக்கான சுற்றின் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.  

துரதிர்ஷ்டவசமாக பிலிப்பைன்ஸிடம் அரை இறுதிப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் 12 - 19 என்ற புள்ளிகள் அடிப்படையில்  இலங்கை  தோல்வி அடைந்தது.   

அப் போட்டியில் இரண்டு அணிகளும் 12 - 12 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் இருந்தபோதிலும் கடைசிக் கட்டத்தில் பிலிப்பைன்ஸ் ட்ரை வைத்து வெற்றியைத் தனதாக்கியது.  

இறுதிப் போட்டியில் சைனீஸ் தாய்ப்பே அணியை 27 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பிலிப்பைன்ஸ் வெற்றிகொண்டு கிண்ணப் பிரிவில் சம்பியனானது.  

பெண்களுக்கான குவளைப் பிரிவில் இலங்கை மகளிர் அணி வெற்றி  

மகளிருக்கான ஆசிய றக்பி எமிரேட்ஸ் அணிக்கு எழுவர் றக்பி சுற்றுப் போட்டியில் குவளைப் பிரிவில் இலங்கை சம்பியனானது.  

எவ் குழுவில் இடம்பெற்ற இலங்கை தனது முதலாவது லீக் போட்டியில் முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்தியாவிடம் 10 - 29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  

எனினும் இரண்டாவது போட்டியில் ஈரானை 20 - 0 என வெற்றி கொண்ட  இலங்கை கடைசி லீக் போட்டியில் இந்தோனேஷியாரவை 17 - 15 என வெற்றிகொண்டு குவளைப் பிரிவில் விளையாட தகுதிபெற்றது. 

குவளைப் பிரிவு அரை இறுதியில் நேபாளத்தை 17 - 15 எனவும்  இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானை 21 - 19 எனவும் வெற்றிகொண்டு  இலங்கை மகளிர் அணி   சம்பியனானது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ அபார...

2024-11-14 11:41:37
news-image

குசல் மெண்டிஸ் 143, அவிஷ்க 100;...

2024-11-13 19:26:11
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைகளில் பாகிஸ்தானியர்கள்...

2024-11-13 18:38:49
news-image

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடுவதை தேர்வு செய்தது

2024-11-13 14:28:26
news-image

இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும்...

2024-11-13 12:45:14
news-image

இலங்கை அணியின் ஆலோசகப் பயிற்றுநர்; தென்...

2024-11-12 18:49:02
news-image

ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான்...

2024-11-12 17:21:10
news-image

ஐசிசி அக்டோபர் மாதத்தின் அதிசிறந்த வீராங்கனை...

2024-11-12 15:03:28
news-image

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-11-11 21:41:20
news-image

அங்குரார்ப்பண ரி10 லங்கா பிறீமியர் லீக்...

2024-11-11 19:12:01
news-image

வருணின் 5 விக்கெட் குவியல் பலனற்றுப்போனது;...

2024-11-11 12:14:31
news-image

இலங்கை - நியூசிலாந்து T20 தொடர்...

2024-11-10 23:20:44